போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் ஜிங்கல்கதிரம்பட்டி கிராமத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களை 1.5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மேட்டுகடைக்கு சென்று அங்கிருந்து வெளியூர்களில் விற்று வருகின்றனர். இதனிடையே ஜிங்கல்கதிரம்பட்டி- மேட்டுகடைக்கு செல்லும் பகுதியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது.
தற்போது இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பகுதியில் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.