தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 19.09.2022 மற்றும் 20.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21.09.2022 மற்றும் 22.09.2022: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
23.09.2022: வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), அலக்காரி எஸ்டேட் (நீலகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), ஆலங்குடி (புதுக்கோட்டை) தலா 4, காரைக்குடி (சிவகங்கை), திருச்சுழி (விருதுநகர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), மேலூர் (மதுரை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), வம்பன் கே.வி.கே (புதுக்கோட்டை) கெட்டி (நீலகிரி), தலா 3,
விருதுநகர் (விருதுநகர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), கோவிலங்குளம் (விருதுநகர்), திருச்செங்கோடு (நாமக்கல்), கீழ் கோதையார் (கன்னியாகுமரி), அருப்புக்கோட்டை கேவிகே (விருதுநகர்) தலா 2, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), திருப்புவனம் (சிவகங்கை), புலிப்பட்டி (மதுரை), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), விமான நிலையம் மதுரை (மதுரை), குன்னூர் (நீலகிரி), காரியாபட்டி (விருதுநகர்), தல்லாகுளம் (மதுரை), சிவகங்கை (சிவகங்கை), திருமயம் (புதுக்கோட்டை), அரிமளம் (புதுக்கோட்டை), கமுதி (ராமநாதபுரம்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
19.09.2022 முதல் 21.09.2022 வரை மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
19.09.2022 மற்றும் 20.09.2022: வடக்கு ஆந்திரகடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
21.09.2022: வடக்கு ஆந்திரகடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.