சென்னை மாநகர எல்லை அரக்கோணம் வரை விரிவடைகிறது! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..

சென்னை: சென்னை மாநகர எல்லை அரக்கோணம் – அச்சிறுப்பாக்கம் வரை விரிவடைய இருப்பதாக  அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில்,  சென்னை முழுமை திட்டம் 3-ன்படி அரக்கோணம், அச்சிறுப்பாக்கம் வரை சென்னை மாநகரம் விரிவடைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 3-ம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு குறித்தும் கருத்தரங்கில் முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர்,  சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் தற்போது 1.2 கோடி பேர் வசித்து வருகின்றனர்.  2027 முதல் 2046-ம் ஆண்டு வரையிலான சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநகர வளச்சிக்கு ஏற்ப மக்களுக்கு கட்டமைப்பு வசதிகள் செய்து தரும் நோக்கில் சென்னை மாநகர வளர்ச்சி குழுமம் முபுறம்போக்கு நிலங்ககளை  மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கும் என்றார்.

மேலும்,  மாநகரம் வளர்ச்சி அடையும்போது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றவர்,  திமுக ஆட்சியில் தான் சென்னை 2-வது முழுமை திட்டம் தொடங்கப்பட்டது. சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள அரசு புறம்போக்கு இடங்கள் கண்டறியப்படும் என்றும் புறம்போக்கு இடங்களை கண்டறிந்து அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.