'ஜெயலலிதா இருக்கும் போதே சசிகலா எதிர்த்தவன் நான்' – கே.பி.முனுசாமி கர்ஜனை!

கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழா மேடையில் கே.பி.முனுசாமி பேசியதாவது:

“அம்மாவுடன்(ஜெயலலிதா) இருந்த சசிகலாவோடு இருக்கும் உறவுகளுக்கும், அவர்களுக்கு துதிபாடுபவர்களுக்கும், அவர்களுக்கு கப்பம் கட்டுபவர்களுக்குதான் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த நான் அப்போதே சசிகலாவை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவன் நான்.

அம்மா(ஜெயலலிதா) மறைவுக்கு பிறகு சசிகலாவை முதல்வராக்க முயற்சி செய்த போதும் எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அணியில் இணைந்தேன், சசிகலாவை கட்சியில் சேர்க்கூடாது என கூறியதற்கு ஆமாம் எனக்கும் உடன்பாடு என கூறினார்.

ஒவ்வொரு மேடையிலும் சொல்ல வைத்தேன் குடும்ப ஆட்சி வந்துவிடக்கூடாது என ஒபிஎஸ் வாயால் சொல்ல வைத்தேன், தர்மயுத்தம் வந்ததே எடப்பாடிக்கு எதிராக இல்லை இந்த கருங்காலி உள்ளே புகுந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டத்தை துவக்கினோம். அதில் அவர் தலைமையேற்றார் அவருடன் நான் உடன் இருந்தேன்.

சசிகலாவை முதல்வராக்கினால் நான் கட்சியிலிருந்து வெளியேறிவிடுகிறேன் என கூறினோன். வைத்திலிங்கத்திற்கு என் ஒரு பிரச்சனை என்னறால் தஞ்சாவூர் மாவட்டத்தில் அவரால் அரசியல் செய்ய முடியவில்லை. சசிகலாவையும், டிடிவி தினகரனையும் எதிர்த்து அரசியல் செய்ய முடியவில்லை, இதனால் அவர் சசிகலாவுன் சேர முயற்சி செய்கிறார்.

நான் அரசியலுக்காக

வரக்கூடாது என கூறவில்லை ஒட்டுமொத்த அரசியலுக்கும் சசிகலா வரக்கூடாது என கூறுகிறேன். புரட்சித் தலைவி அம்மா இருக்கும் பொது குழுவிலியே நான் பேசினேன் வைத்தால் பிள்ளையார் எடுத்து போட்டா சாணி என அப்போது அம்மா என்னை ஆச்சரியமாக பார்த்தார். எனக்கு நடிக்க தெரியாது. அப்போதியிலிருந்து தற்போது வரை ஒரே கருத்தை தான் சொல்கிறேன் சசிகலா இணைக்கூடாது என தற்போது ஒபிஎஸ் வெளியேறி பல்வேறு கருத்துகளை சொல்லி வருகிறார்.

நான் நடுநிலையாளன் – பார்த்திபன் பேச்சு!

இரு தினங்களுக்கு ஓபிஎஸ்யிடம் அதிமுக கட்சியினர் மீது திமுக வழக்கு போடுகிறார்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர்கள் போடுவார்கள் நாம் சட்ட ரீதியாக பார்த்துகொள்ள வேண்டும் என கூறுகிறார். அப்படி என்றால் இத்தனை ஆண்டுகள் எங்களுடன் இருந்தற்கு என்ன அர்த்தம். அதிமுகவினர் மீது நமது எதிரி வழக்கு போடுகிறார்கள் என்றால் அதற்கு என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் பொய் வழக்கு போடுகிறார்கள் நமது கட்சியை அழிக்க பார்க்கிறார்கள் எனத் தான் பேசியிருக்க வேண்டும் ஆனால் அவர் மாறாக சொல்கிறார் என்றால் அவரது மனதில் எவ்வளவு கொடூரமான சிந்தனை இருக்க வேண்டும்” இவ்வாறு மேடையில் ஆவேசமாக கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.