தவறியும் இன்று இந்த 4 பங்கினை வாங்கிடாதீங்க.. கவனமா இருங்க!

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்போது முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். எனினும் அந்த சமயத்தில் பலரும் அதே மன நிலையில் அதிகளவிலான ஆர்டர்களை எடுப்பர். இதனால் குறிப்பிட்ட சில நல்ல பங்குகளில் ஆர்டர்கள் அதிகளவில் எடுக்கப்படும்.

இந்த சமயத்தில் என். எஸ்.இ எஃப் & ஓவில் ஓபன் இன்ட்ரஸ்ட் விகிதம் 95% லிமிட்டினை தாண்டினால் அந்த பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யடும்.

அப்படி 95% வரம்பினை தாண்டிய 4 பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யப்பட்டுள்ளன.

ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 ஃபண்ட்ஸ்.. அட்டகாசமான 3 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. நீங்க முதலீடு?

என்னென்ன பங்குகள்?

என்னென்ன பங்குகள்?

இந்த தடை பட்டியலில் ஆர்பிஎல் வங்கி, இந்தியா புல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ், பி வி ஆர், இந்திய சிமெண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் அடங்கும். என் எஸ் இ தினசரி இதுபோன்ற 95% வரம்பினை தாண்டிய பங்குகளை அப்டேட் செய்து வருகிறது. இதில் பொதுவாக வணிகம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

மீண்டும் எப்போது வணிகத்திற்கு வரும்?

மீண்டும் எப்போது வணிகத்திற்கு வரும்?

ஒபன் இன்ட்ரஸ்ட் விகிதமானது 95% வரம்பினை தாண்டிய பங்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இது மீண்டும் 80% கீழாக ஓபன் இன்ட்ரஸ்ட் குறையும் போது வர்த்தகத்திற்கு திரும்பும். இன்று எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்ற நிலையில், தற்போது என்.எஸ்.இ-யில் இந்த 4 நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.

எப்படி தெரிந்து கொள்ளலாம்?
 

எப்படி தெரிந்து கொள்ளலாம்?

இதனை எப்படி தெரிந்து கொள்வது? எப்படி அபராதத்தில் இருந்து தப்பிப்பது? இதனை https://www.niftytrader.in/ban-list என்ற என்.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம். இதில் தடை செய்யப்பட்ட பங்குகள், தடை செய்யப்படலாம் என்ற நிலையில் உள்ள பங்குகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டிருக்கும்.

 இனி தடை செய்யலாம்

இனி தடை செய்யலாம்

இந்த பட்டியியலில் டெல்டா கார்ப், அம்புஜா சிமெண்ட், BHEL, ஜீ தமிழ், பஞ்சாப் நேஷனல் வங்கி, சன் டிவி எஸ்கார்ட்ஸ், எல் & டி ஹவுஸிங் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள்இந்த தடை பட்டியலில் இணைந்தாலும் இணையலாம் என்ற சந்தேகம் நிலவி வருகின்றன. இவற்றின் ஓபன் இன்டஸ்ட்ரஸ்ட் விகிதமானது 80 – 94 வரையில் உள்ளது. இதில் இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் தடை பட்டியலில் இருந்து வெளியேறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Be alert! 4 stocks including PVR, India Cements are banned in F&O today

Be alert! 4 stocks including PVR, India Cements are banned in F&O today/ தவறியும் இன்றைக்கு இந்த 4 பங்கினை வாங்கிடாதீங்க.. ஏன் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.