இனிப்பு வகைகள் பலருக்கும் பிடிக்கும். விரும்பி உண்பர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு விரும்பி சாப்பிடுவர். அதேநேரத்தில் ஆரோக்கியம் முக்கியம். வீட்டில் செய்தவைகளை சாப்பிடுவது உகந்தது. வீட்டில் இனிப்பு செய்வது கடினம் அல்ல, சுலபம் தான். நம்மிடம் இருக்கும் பொருள் வைத்தே செய்யலாம். தேங்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து கிடைக்கிறது. அந்த வகையில் தித்திப்பான தேங்காய் அல்வா எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – 2 கப்
பச்சரிசி – அரை கப்
நெய் – ஒரு கரண்டி
முந்திரிப் பருப்பு – 12
தூள் வெல்லம் – 1 1/2 கப்
ஏலக்காய் – தேவையான அளவு
செய்முறை
தேங்காயை பூ போல துருவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரி பருப்பை உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல ஏலக்காயை தோல் நீக்கி வைக்கவும். ஏலக்காயை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளலாம். பச்சரிசியை மணி நேரம் நீரில் ஊற வைத்து, கல் நீக்கி நன்றாக களைந்து விடவும்.
இப்போது துருவிய தேங்காய் மற்றும் அரிசியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். அடுத்து கடாய் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்த தேங்காய், அரிசி கலவையை ஊற்றி
வெல்லத் தூள், ஏலக்காய் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும். மற்றொரு கடாயில் நெய், முந்திரியை போட்டு பொன்னிறத்தில் வறுத்தெடுக்கவும். தேங்காய், அரிசி கலவை கொதி வரத்தொடங்கியதும் நெய், முந்திரியை சேர்த்து இறக்கவும். சுவையான தேங்காய் அல்வா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“