தினமும் இத்தனை முறை டீ சாப்பிடுங்க… சுகர் வரும் வாய்ப்பை குறைக்குதாம்!

நீரிழிவு பாதிப்பில் இரண்டு வகை உள்ளன. இவற்றை மருத்துவ உலகினர் டைப்1 மற்றும் டைப்2 நீரிழிவு எனப் பிரிக்கின்றனர். இந்த வகை நீரிழிவில் பாதிப்பு மற்றும் அறிகுறிகள் பொதுவாக ஒரே மாதிரியாக காணப்படும்.

அந்த வகையில் டைப்-2 நீரிழிவு என்பது, ஒரு நபரின் உடலில் குளுக்கோஸைக் கட்டுப்படுத்தி எரிபொருளாகப் பயன்படுத்தும் விதத்தில் ஏற்படும் சிக்கலைக் காட்டுகிறது.
இன்சுலினால் குளுக்கோசை கட்டுப்படுத்த முடியாத நிலை நீண்ட காலம் நீடித்தால், இரத்த ஓட்டத்தில் அதிக குளுக்கோஸ் சேர்ந்துவிடும்.

இது நரம்பு மண்டலம், மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு தொடர்பான கோளாறுகளுக்கு வழிவகுக்கும். டைப் 2 நீரிழிவு நோயில், இரண்டு விதங்களால் ஏற்படும்.
ஒன்று, நோயாளியின் கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாது. மற்றொன்று உடலில் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்தாலும், குளுக்கோஸ் அளவு அதிகமாக இருந்தாலும், நீரிழிவு நோய் ஏற்படும்.

பொதுவாக இந்த வகை நீரிழிவு நோய்கள் வயது அதிகமானவர்களிடம் மட்டும் காணப்படும். ஆனால் டைப்1 நீரிழிவு நோய்கள் குழந்தைகள் உள்பட அனைத்து வயதினரையும் தாக்கும்.
இதற்கு உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் தான் காரணம். எனினும், டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னை இருந்தால் மங்கலான பார்வை, அடிக்கடி தலைவலி, உயர் இரத்த அழுத்தம், எடை குறைதல், உடல் எடை குறைவு, நாக்கு வறண்டு போதல் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும்.

இந்த நிலையில் இந்த வகை நீரிழிவு நோயாளிகளுக்கு பாலில்லா தேநீர் மற்றும் க்ரீன் டீ நல்ல வேலை செய்யும் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக 8க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

அதாவது, ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு கப் தேநீர் அருந்துவது 17 சதவீதம் டைப்2 நீரிழிவை குறைக்கிறது எனத் தெரியவந்துள்ளது. மேலும் ஆய்வில், தூக்கமின்மை உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும் எனத் தெரியவந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.