அதிமுகவில் உட்கட்சி மோதல் ஒரு பக்கம் வெடித்துள்ள நிலையில் திமுகவிலும் உட்கட்சி விவகாரங்கள் அவ்வளவு சுமுகமாக இல்லை. உட்கட்சித் தேர்தல் பணிகள் நிறைவடையாமல் இழுத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த சூழலில் திமுக துணைப் பொதுச் செயலாளர்
தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அவர் பாஜக வேட்பாளர் சி.ஆர்.சரவஸ்வதியுடம் தோல்வியடைந்தார். சுப்புலட்சுமி வெற்றி பெற்றிருந்தால் அவர் தான் சட்டப்பேரவை சபாநாயகர் என திமுக வட்டாரங்கள் கூறி வந்தன.
ஆனால் அவரது கணவர் ஜெகதீசனின் கருத்துக்கள் திமுக தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் மாமனிதன் வைகோ என்ற ஆவண படத்தை முதல்வர்
வெளியிட்டு வைகோவை புகழ்ந்து பேசினார்.
இது குறித்து ஜெகதீசன் தனது சமூக வலைதள பக்கத்தில், “வெட்கமில்லை மானமில்லை நடத்துராஜா நேரம் எப்படி மாறி இருக்குது பாரு ராஜா. துரோகத்தை எதிர்த்து அன்று கருணாநிதிக்கு ஆதரவாக நின்றவர்கள் நிலை என்ன ராஜா. வெட்கம், மானம், ரோசம், மரியாதை, சூடு, சொரணை எனக்கு உள்ளது என்ன செய்ய உடன்பிறப்பே” என்று கடுமையாக விமர்சித்தார்.
மற்றொரு பதிவில், “லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டு அரசில் ஒரு துறையை சொன்னால் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்கலாம் இயலுமா என் தோழா” என தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு, அமைச்சர் மூர்த்தி இல்ல திருமணம் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் திமுகவை கடுமையாக சாடினார்.
மாநில துணைப் பொதுச் செயலாளர் என்ற முக்கிய பதவியில் இருப்பவருடைய கணவரே கட்சிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் சேற்றை வாரி வீசுகிறாரே என்று திமுக தொண்டர்கள் திகைக்கின்றனர். இந்த தகவல் முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதாக சொல்கிறார்கள்.
இது ஒருபுறமிருக்க விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவை சுப்புலட்சுமி ஜெகதீசன் புறக்கணித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கட்சி தலைமைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளாராம். ஆனால் தலைமையோ இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறது என்கிறார்கள்.