இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி சமீபத்தில் திருப்பதி சென்றார் என்றும் அங்கு திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடை அளித்தார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் திருப்பதியை அடுத்து அவர் குருவாயூர் கோவிலுக்கு சென்று சுவாமி வழிபாடு செய்தார்.
மேலும் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடை வழங்கியது போலவே குருவாயூர் கோயிலுக்கு அவர் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கியுள்ளார்.
ராதிகா மெர்ச்சன்ட் உடன் திருப்பதி சென்ற முகேஷ் அம்பானி.. எவ்வளவு நன்கொடை கொடுத்தார் தெரியுமா..?
முகேஷ் அம்பானி
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஒரு சிறந்த ஆன்மீகவாதி என்பதும், அவர் அவ்வப்போது முக்கிய கோவில்களுக்கு சென்று வருகிறார் என்பதும் பலர் அறிந்ததே. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை முகேஷ் அம்பானி ராஜஸ்தானின் நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலுக்கு விஜயம் செய்தார். அதன்பின் அவர் ஆந்திராவில் உள்ள திருப்பதி பாலாஜி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
குடும்பத்துடன் ஆன்மீக பயணம்
இந்த ஆன்மீக பயணத்தில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினர்களுடன் திருப்பதியை அடுத்து குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு சென்றார். குருவாயூர் கோவிலின் உள் சன்னதியில் பிரார்த்தனை செய்தார். கோவில் யானைகளுக்கு காணிக்கை செலுத்தினார்.
வரவேற்பு
குருவாயூர் கோவிலுக்கு வந்த முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர்களை குருவாயூர் தேவசம்போர்டு தலைவர் பேராசிரியர் பி.கே.விஜயன் வரவேற்று, சுவரோவியம் வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கினார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவரும் நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானி சனிக்கிழமையன்று கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து, அதன் கோவிலின் அன்னதான நிதிக்கு ரூ.1.51 கோடி நன்கொடையாக வழங்கினார்.
திருப்பதிக்கு ரூ.1.50 கோடி
முன்னதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி, திருமலையில் உள்ள புராதன மலைக் கோவிலான வெங்கடேஸ்வரா கோவிலுக்கு சென்றார் என்பது தெரிந்ததே. வெங்கடேஸ்வராவின் தீவிர பக்தரான அம்பானி, வெள்ளிக்கிழமை அதிகாலையில் திருமலைக்கு வந்தடைந்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார். மேலும் சுவாமி தரிசனம் செய்த பிறகு, அம்பானி 1.5 கோடி ரூபாய்க்கான காசோலையை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கட தர்ம ரெட்டியிடம் வழங்கினார்.
புனித சடங்கு
திருமலையில் சுவாமி தரிசனம் முடிந்தபிறகு மலையடிவாரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கிய அம்பானி குடும்பத்தினர் அதன் பிறகு வெங்கடேச பெருமானுக்கு ஒரு மணி நேரம் நடந்த புனித சடங்கில் கலந்து கொண்டனர். மேலும் திருப்பதியில் இருந்து வெளியேறு முன் அம்பானி, கோவில் யானைகளுக்கு உணவளித்ததாக தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீபாவளிக்கு 5ஜி சேவை
இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இந்த ஆண்டு தீபாவளிக்குள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பல முக்கிய நகரங்களில் அதிவேக 5ஜி தொலைத்தொடர்பு சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. அதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு நகரங்கள், தாலுகாக்கள் மற்றும் தாலுகாக்களுக்கு அதன் 5ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்த உத்தேசித்துள்ளது.
After Tirupathi Mukesh Ambani visit Guruvayur and donates Rs 1.51 crore!
After Tirupathi Mukesh Ambani visit Guruvayur and donates Rs 1.51 crore! | திருப்பதி கோவிலுக்கு ரூ.1.51 கோடி.. குருவாயூர் கோவிலுக்கு அம்பானி எவ்வளவு கொடுத்தார்?