வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார். சீனாவின் கடும் எச்சரிக்கையை மீறி நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்கள் தொடர்நது தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது.
இந்த பதற்றத்துக்கு மத்தியில் தைவானுக்கு 1.09 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களின் அளித்த பேட்டி: தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும்.
உக்ரைனில் இருப்பதைப் போல இல்லாமல், தைவான் மீது சீனப் படையெடுப்பு ஏற்பட்டால், அமெரிக்கப் படை வீரர்கள், தைவானை பாதுகாப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவில் கொரோனா பேராபத்து முடிவுக்கு வந்தது: பைடன் புகழாரம்
அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றின் பேராபத்து முடிவுக்கு வந்து விட்டது. கொரோனா தொற்றின் இறப்பகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement