நாளிதழ் விற்பனை கண்காணிப்பு அமைப்பின் நிர்வாகிகள் தேர்வு| Dinamalar

புதுடில்லி, நாளிதழ்களின் விற்பனையை கண்காணிக்கும் ‘ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன்’ அமைப்பின் 2022 – 2-023ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.நாளிதழ்களின் விற்பனையை கண்காணிக்கும் ‘ஆடிட் பீரோ ஆப் சர்க்குலேஷன்’ அமைப்பின் 2022 – 2-023ம் ஆண்டுக்கான தலைவராக ‘சகால் மீடியா’ தலைவர் பிரதாப் பவார், துணைத் தலைவராக ஆர்.கே.சுவாமி அட்வர்டைசிங் நிறுவன நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் கே.சுவாமி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கவுரவ செயலராக ‘மலையாள மனோரமா’வின் ரியாத் மேத்யூவும், கவுரவ பொருளாளராக ‘மேடிசன் கம்யூனிகேஷன்ஸ்’ விக்ரம் சகுஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கமிட்டி உறுப்பினர்களாக ‘த பாம்பே சமாச்சார்’ ஹோர்முஸ்ஜி என்.காமா, ‘ஜாக்ரன் பிரகாஷன்’ சைலேஷ் குப்தா, ‘ஹிந்துஸ்தான் மீடியா’ பிரவின் சோமேஸ்வர், ‘பென்னெட் கால்மென்’ மோஹித் ஜெயின், ஏ.பி.பி., துர்பா முகர்ஜி, ‘லோக்மத் மீடியா’ கர்ணன் தர்தா மற்றும் ‘ஐ.பி.ஜி., மீடியா பிராண்ட்ஸ்’ சசிதர் சின்ஹா, ‘குரூப் எம்’ பிரசாந்த் குமார், ‘யுனைடெட் புரூவரீஸ்’ தேபபிரதா முகர்ஜி, ஐ.டி.சி., கருனேஷ் பஜாஜ், ‘டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி’ அனிருத்தா ஹல்தார், ‘மாருதி சுசூகி இந்தியா’ சஷாங்க் ஸ்ரீவஸ்தவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.