சென்னை : நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது இவர்களின் காதல் விவகாரம் உறுதியாகி உள்ளது.
காதல் எப்படி வரும்..ஏன் வரும்.. எப்போது வரும் என்பது தெரியாது ஆனால், வரவேண்டிய நேரத்திற்கு கரைட்டா வரும்னு சொல்வார்கள். அப்படித்தான் கோலிவுட் நட்சத்திரங்கள் காதலில் விழுந்துள்ளனர்.
தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்து நடித்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் தீ எக்குதப்பாக பற்றிக்கொண்டுள்ளது.
கௌதம் கார்த்திக்
நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் காதலித்து வருவதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான கடல் திரைப்படத்தில் நடித்து தனது அறிமுகத்தை கொடுத்தார். ஆரம்பத்தில் இவரின் படங்கள் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், திரைத்துறையில் ஜெயிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
கைவசம் உள்ள படங்கள்
அண்மையில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருந்து விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. கௌதம் கார்த்திக், சிப்பாய், யுத்த சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில், பத்து தல திரைப்படம் டிசம்பர் 16ந் தேதி வெளியாக உள்ளது.
காதலில் விழுந்த ஜோடி
தேவராட்டம் திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமாவை காதலித்து வருவதாக வதந்திகள் பரவின. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் இந்த ஆண்டின் இறுதியில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால், இதுகுறித்து இருவரும் எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தனர்.
ஜோடியாக நிச்சயதார்த்த விழாவில்
இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் ஜோடியாக நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் கௌதம் கார்த்திக்கின் நெருங்கிய நண்பரான கோபி என்பவரின் நிச்சயதார்த்த விழாவில் இருவரும் இணைந்து கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருவருக்கும் இடையேயான காதலை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.