விருதுநகரில் கடந்த 15 ஆம் தேதி
சார்பில் முப்பெரும் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழகம் முதல்வரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முப்பெரும் விழாவில் திமுக பொதுச் செயலர் துரைமுருகன் தலைமை வகித்தார்.
அந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதிய 4,041 கடிதங்கள் அடங்கிய 21,510 பணக்கங்கள் கொண்ட நூலை 54 தொகுதிகளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட துரைமுருகன் பெற்றுக்கொண்டார். அதேபோல, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய திராவிட மாடல் புத்தகத்தை துரைமுருகன் வெளியிட முதல் பிரதியை டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார். அப்போது துரைமுருகன் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கருணாநிதியை பற்றி புகழ்ந்து பேசினார். விழாவில் பேசிய துரைமுருகன், ” மராட்டியத்தில் ஆட்சியின் மீது கவனத்தை செலுத்தி கட்சியை கோட்டை விட்டார்கள், பிகாரில் அதேதான் நடந்தது. ஆனால் கட்சியையும், ஆட்சியையும் ஒருங்கே நடத்துவதற்கு சில திறமைகள் வேண்டும் அந்த திறமை தளபதி ஸ்டாலினிடம் இருக்கும் காரணத்தால்தான் அவர் நடத்துகின்ற ஆட்சியை கண்டு அகில இந்தியாவே புகழ்கிறது என கூறினார்.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சென்னை மண்ணடியிலும் திமுக சார்பில் முப்பெரும் விழா
பொதுக்கூட்டம் நடந்தது. அந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன் பெரியாரை குறித்து சில நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். ஆற்காட்டில் ஒரு மாநாடு நடந்தது. அப்போது கருணாநிதி அவசரமாக வேறொரு இடத்துக்கு செல்ல புறப்பட்டபோது என்னை பெரியாரின் அருகில் அமரவைத்து ஐயாவை பார்த்துக்கொள் என கூறிவிட்டு சென்றார்.
அப்போது
என்னை பார்த்து ” உன் பெயர் என்ன ஊர் என்ன” என்று கேட்டார்.. நான் இரண்டையும் சொன்னேன்.. அதற்கு பிறகு உன் சாதி என்ன என்று கேட்டார்… அதையும் சொன்னேன்.. சிறிது நேரம் என்னை உற்று பார்த்த பெரியார், நீயும் பறையன் மாதிரிதான்… வன்னியர்னா பெருசா நெனச்சிக்காத… சவுத்தார்காட்ல உங்க நிலைமை என்னனு தெரியுமா என்று கேட்டு கதை கதையா சொன்னார்… நான் அன்னைக்கே முக்கால்வாசி திக- காரனா மாறிட்டேன்” என்று துரைமுருகன் சொல்ல அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது. மேலும், தற்போதைய அரசியல் சூழலில் ”யார் எதிர்க்கட்சி தலைவர் என என்னிடம் ஒரு தொண்டர் கேட்டான்”… ”நானும் அவரைத்தான் தேடிகிட்டு இருக்கேன்” என்று சொன்னேன் என்று துரைமுருகன் பேச சிரிப்பலை எழுந்தது.