சென்னை:
நடிகர்
அருண்விஜய்,
நடிகை
பலக்
லல்வானி,
காளிவெங்கட்
நடிப்பில்
திரையரங்குகளில்
வெற்றிகரமாக
ஓடிக்கொண்டு
இருக்கும்
படம்
சினம்.
இத்திரைப்படத்தை
நடிகர்
விஜயகுமார்
தயாரிக்க,
ஹரிதாஸ்
பட
இயக்குநர்
குமாரவேலன்
இயக்கியுள்ளார்.
சினம்
படத்தில்
நடித்த
நடிகை
பலக்
லல்வாணி
நமது
பிலீம்பீட்
சேனலுக்கு
அளித்த
சிறப்பு
பேட்டியை
இங்கு
காணலாம்.
பானிபூரி
பிடிக்கும்
கேள்வி:
உங்களுக்கு
பிடித்த
ஸ்னாக்ஸ்
எது?
பதில்:
நான்
சினம்
படத்தில்
நடித்தது
எனக்கு
மிகவும்
சந்தோஷம்.
நான்
பிறந்தது
அகமதாபாத்.
ஆனால்
வளர்ந்தது
மும்பையில்.
எனக்கு
பானிபூரி
மாதிரியான
ஸ்னாக்ஸ்
ரொம்ப
பிடிக்கும்.
சென்னையில்
நிறைய
இடங்களுக்கு
சென்று
சுற்றி
பார்த்துள்ளேன்.
ஆனால்
அந்த
இடங்களில்
பெயர்
எனக்கு
நினைவில்
இல்லை.
சென்னையில்
நான்
அதிகம்
விரும்பி
சாப்பிடுவது
முறுக்கு.
பலமுறை
பார்த்துள்ளேன்
கேள்வி:
உங்களுக்கு
பிடித்த
இயக்குநர்
யார்?
பதில்:
தமிழ்
சினிமாவில்
எனக்கு
மிகவும்
பிடித்த
இயக்குநர்
மணிரத்னம்,
வெங்கட்பிரபு
மற்றும்
ஏ.ஆர்.முருகதாஸ்.
மணிரத்னம்
இயக்கத்தில்
வெளிவந்த
பம்பாய்
திரைப்படம்
எனக்கு
மிகவும்
பிடித்தபடம்.
அந்த
படத்தை
பல
முறை
பார்த்துள்ளேன்.
விழிப்புணர்வு
தேவை
கேள்வி:
சினம்
திரைப்படம்
குறித்து
நீங்கள்
கூற
விரும்புவது?
பதில்:
சினம்
திரைப்படம்
பெண்கள்
பாதுகாப்பு
குறித்து
படமாகும்.
இன்றைய
காலக்கட்டத்தில்
பெண்கள்
பாதுகாப்புக்கு
விழிப்புணர்வோடு
இருப்பது
தான்
சரியான
வழிமுறையாகும்.
பொது
இடங்களில்
செல்லும்
பொழுதும்,
பொதுபோக்குவரத்தை
பயன்படுத்தும்பொழுதும்
விழிப்புணர்வோடு
இருக்க
வேண்டும்.
நம்மை
சுற்றியிருப்பவர்கள்
ஆணாக
இருந்தாலும்,
பெண்ணாக
இருந்தாலும்
கவனமாக
இருக்க
வேண்டும்.
நம்முடைய
பாதுகாப்புக்கான
விதை
நம்மிடமிருந்தே
விதைக்கப்பட
வேண்டும்.
எது
அவசியம்?
கேள்வி:
பெண்களுக்கு
நீங்கள்
கூறும்
அறிவுரை
என்ன?
பதில்:
பெண்கள்
எப்பொழுதும்
தங்களின்
தோற்றத்தின்
மீது
அதிக
அக்கறை
செலுத்த
வேண்டும்.
அழகாக
தோற்றமளிக்க
என்ன
முயற்சிகள்
செய்ய
வேண்டுமோ
அதில்
பெண்கள்
கவனம்
செலுத்த
வேண்டும்.
பெண்கள்
உடற்பயிற்சி
செய்வது
அவசியமான
ஒன்றாகும்.
எனக்கு
நடப்பதும்,
நடனமாடுவதும்
தான்
மிகவும்
சந்தோஷத்தை
தரும்.
எந்த
மாதிரியான
நடனம்
ஆடினாலும்
அதுவும்
உடற்பயிற்சி
தான்.
காஸ்ட்யூம்
அருமை
கேள்வி:
உங்கள்
காஸ்ட்யூம்
மற்றும்
கேமராமேன்
குறித்து
….
பதில்:
சினம்
படத்தில்
என்னுடைய
காஸ்ட்யூமை
நடிகர்
அருண்விஜய்யின்
மனைவி
ஆர்த்தி
அருமையாக
செய்திருப்பார்கள்.
படத்தில்
வருகின்ற
ரன்னிங்,
சேசிங்
காட்சிகள்
அதிகம்.
அதில்
என்னை
கேமராமேன்
அழகாக
காட்டியுள்ளார்
என்றார்.
இந்த
பேட்டியின்
முழு
விடியோவை
காண
பில்மிபீட்
தமிழ்
யூட்யூப்
சேனலிலும்
https://youtu.be/muGZ1mKzSwA
இந்த
லிங்கை
கிளிக்
செய்தும்
காணலாம்.
மறக்காமல்
முழு
வீடியோவையும்
பாருங்கள்.