உடல்நலக்குறைவால் பிரிந்த மலையாள நடிகை ராஷ்மி ஜெயகோபாலின் உயிர்
எங்கள் அன்பான ராஷ்மி சேச்சி, இதுவே எங்களின் கடைசி புகைப்படமாக இருக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை என நடிகை சந்திரா லக்ஷ்மண் உருக்கம்
மலையாள நடிகை ராஷ்மி ஜெயகோபால் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
கேரளாவில் வணிக விளம்பரங்களில் நடித்த ராஷ்மி ஜெயகோபால்(51), பின்னர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
மேலும் ஸ்வந்தம் சுஜாதா என்ற தொடரில் நடித்து பிரபலமடைந்தார். திருமணமான ராஷ்மி, கணவர் ஜெயகோபால் மற்றும் மகன் பிரஷாந்த் கேசவாவுடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவால் ராஷ்மி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கொச்சியில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.