பிரிட்டன் மகாராணியின் இறுதிச்சடங்கு பாரம்பரியங்கள்: பல நூற்றாண்டு சம்பிரதாயம்

லண்டன்: இரண்டாம் எலிசபெத் மகாராணியின் சவப்பெட்டியை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு எடுத்துச் செல்லும் சடங்கு ஊர்வலங்கள், பின்னர் வின்ட்சரில் அவர் அடக்கம் செய்யப்படும் இடத்துக்கு எடுத்து செல்வது என ராணியின் பயணம், பிரிட்டிஷ் முடியாட்சியின் பண்டைய மரபுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது. காலங்கள் மாறினாலும் தங்கள் மரபை மாற்றாமல் அரச குடும்பம் பல நூற்றாண்டு பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுகிறது. பிரிட்டனின் ராயல் நேவி பணியாளர்கள், வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரை பீரங்கி வண்டியில் வைக்கப்பட்ட ராணியின் சவப்பெட்டியை இழுக்க கயிறுகளைப் பயன்படுத்துவார்கள். 142 மாலுமிகள் கொண்ட குழு ராஜ மரியாதையுடன் சவப்பெட்டி இருக்கும் வாகனத்தை கயிறுகளால் இழுத்துச் செல்வார்கள்.

இந்த பாரம்பரியம் பிப்ரவரி 1901 இல் விக்டோரியா மகாராணிக்கு நடைபெற்ற இறுதிச் சடங்கு பாரம்பரியத்திற்கு முந்தையது என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவில் எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம்! இன்னும் 63 ஆண்டுகளுக்கு திறக்க முடியாது..

கரடித் தோலில் தொப்பி
1வது பட்டாலியன் கிரெனேடியர் காவலர்களை சேர்ந்த எட்டு வீரர்கள் ராணியின் சவப்பெட்டியை வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து வெளியே துப்பாக்கி வண்டிக்கும், பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேவிற்கும் கொண்டு செல்லும் பணியை மேற்கொள்வார்கள்.

பிரிட்டிஷ் இராணுவத்தில் மிகவும் பழமையான ரெஜிமென்ட், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் (இப்போது கிங்ஸ்) லைஃப் கார்டை உருவாக்கும் ஐந்து காலாட்படை படைப்பிரிவுகளில் ஒன்றாகும்.

படைப்பிரிவின் வீரர்கள் கரடித்தோலால் ஆன நீண்ட பெரிய தொப்பிகளை அணிவது வழக்கம். 1815 இல் வாட்டர்லூவில் தோற்கடிக்கப்பட்ட நெப்போலியனின் ஏகாதிபத்திய காவலரின் கிரெனேடியர்களில் இருந்து நகலெடுக்கப்பட்ட சீருடை இவர்களுடையது என்பது வரலாறு.

மேலும் படிக்க | எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்?

ராணுவ வீரர்களுடன், ராணிக்கான சர்வீஸ் ஈக்வெரிகளும், பொதுக் கடமைகளைச் செய்வதில் அரச குடும்பத்தாருக்கு உதவும் உதவியாளர்களும் இறுதி ஊர்வலத்தில் வருவார்கள்.

ராணியின் சவப்பெட்டிக்கு மிக அருகில் அணிவகுத்துச் செல்லும் ஊர்வலத்தில் மூன்று படைப்பிரிவுகள் முக்கிய பங்கு வகிக்கும். 1485 இல் உருவாக்கப்பட்ட பிரிட்டிஷ் இராணுவத்தின் மிகப் பழமையான இராணுவப் பிரிவான Yeomen of the Guard மற்றும் ஹானரபிள் கார்ப்ஸ் ஆஃப் ஜென்டில்மேன் அட் ஆர்ம்ஸ் ஆகியவை அரச குடும்பத்துக்கான இரண்டு முன்னாள் மெய்க்காப்பாளர் பிரிவுகளாகும், அவை இப்போது பெயரளவிலேயே இருக்கின்றன.

யோமன் ஆஃப் தி காவலர்கள் டியூடர் சகாப்தத்தில், அதாவது 16 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு மற்றும் பொன்னிறம் கலந்த சீருடையை அணிவார்கள்.

மேலும் படிக்க | பாரம்பரியங்கள் மாறுகின்றன! பிரிட்டன் புதிய பிரதமர் அறிவிப்பில் மாறும் மரபுகள்

நாடாளுமன்றம் திறக்கப்படுவதற்கு முன்பு, வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை முழுவதுமாக சோதிப்பது அவர்களது முக்கியமனா பணியாகும். 
1605 ஆம் ஆண்டில் முதலாம் ஜேம்ஸ் அரசரை தாக்கவும் நாடாளுமன்றத்தை தகர்க்கவும் கை ஃபாக்ஸ் தலைமையிலானவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றது. இந்த சதியை நினைவுகூறும் சடங்கை இவர்கள் இன்றும் தொடர்கிறார்கள். 

மகாராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் இருக்குன்போது அவருக்கு மெய்க்காப்பாளர்களாக செயல்பட்ட ராயல் கம்பெனி ஆஃப் ஆர்ச்சர்ஸ் உறுப்பினர்கள் எப்போதும் அவருக்கு பாதுகாப்பாக நிழல் போல் இருப்பார்கள். 

பிரிட்டனில் உள்ள மற்ற படைப்பிரிவுகள் மற்றும் காமன்வெல்த்தின் ஆயுதப் படைகளில் இருந்து சில பிரிவினர், பிரிட்டிஷ் மன்னர் தலைமையிலான நாடுகளின் குழு, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகிலுள்ள ஹைட் பார்க் கார்னரில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயிலிருந்து வெலிங்டன் ஆர்ச் வரையிலான இறுதி ஊர்வலத்தில் மீண்டும் இணைவார்கள்.

இரண்டாம் எலிசபெத்தின் அரச மாளிகை
புதிய அரசர் மூன்றாம் சார்லஸ் தலைமையில் அரச குடும்ப உறுப்பினர்கள் சவப்பெட்டி ஏந்திய வாகனத்தை பின்தொடர்வார்கள், அவர்களைப் பின்தொடர்வது அரச குடும்பத்தின் மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லைன் உட்பட ராணியின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அணிவகுத்துச் செல்வார்கள்.

அவர்களுக்கு முன்னால் ஸ்காட்டிஷ் மற்றும் ஐரிஷ் படைப்பிரிவுகளின் பைப்பர்கள் மற்றும் டிரம்மர்கள் வருவார்கள், ஆயுதப் படைகளின் ஒரு பகுதியாக இருக்கும் நேபாள வீரர்களைக் கொண்ட கூர்க்காஸ் படைப்பிரிவின் பிரிகேட். 200 ராயல் ஏர் ஃபோர்ஸ் இசைக்கலைஞர்களும் அந்த குழுவில் இருப்பார்கள்.

மேலும் படிக்க | இங்கிலாந்து ராணிக்கு இறுதி மரியாதை! துக்க அஞ்சலி செலுத்தும் பிரிட்டன்

6000 படையினர்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் பிரித்தானிய ஆயுதப் படையைச் சேர்ந்த சுமார் 6,000 வீரர்கள், மாலுமிகள் மற்றும் விமானிகள் பங்கேற்பார்கள் என்று பாதுகாப்புப் படைகளின் தலைவர் அட்மிரல் டோனி ராடாகின் தெரிவித்தார்.

வழியில் பல இடங்களில் அவர்கள் அரச வணக்கம் செலுத்துவார்கள். உதாரணமாக ராணியை நினைவுகூரும் வகையில் விக்டோரியா நினைவிடத்தை கடந்து செல்லும் போது படைவீரர்கள் தங்கள் மேன்மை பொருந்திய அரசிக்கு மரியாதை செலுத்துவார்கள்.

மாட்சிமை மிக்க ராணியின் பூதவுடலுக்கு செய்யும் இறுதி மரியாதை இது. இந்த இறுதி ஊர்வலத்திற்கு பிறகு, இங்கிலாந்து மகாராஜாவாக பதவியேற்றிருக்கும் மாட்சிமை வாய்ந்த மன்னர் சார்லஸ்க்கு இனிமேல் முதல் மரியாதை கொடுக்கப்படும். 

மேலும் படிக்க | ராணி எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சீன பிரதிநிதிகளுக்கு தடை! பின்னணி இதுதான்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.