பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்

காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்ற தலைவரின் வித்தியாசமான முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள். அப்படி என்ன செய்துள்ளார் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்வோம். கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள காட்டம்பட்டி ஊராட்சி இருக்கிறது. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வீட்டிற்கே வந்து சென்று வாங்கிச்செல்ல தூய்மைப்பணியாளர்கள் உள்ளனர்.

அப்படியிருந்து பொதுமக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச்செல்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் காட்டம்பட்டி பெண் ஊராட்சி மன்றத்தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை பொது இடங்களில் அதாவது குப்பை கொட்டப்படும் இடங்களில் வைத்துள்ளார்.

அதன்படி இந்த போர்டில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், குப்பை கொட்டுபவர்களை வீடியோ படம் எடுத்துக்கொடுத்தால் அவர்களுக்கு ரூபாய் 500 சன்மானம் வழங்கப்படும் என அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூதன முயற்சியால் அந்த பகுதியில் ஸ்கடந்த சில தினங்களாக பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதில்லை.

பொறுப்பில்லாம சாலையில் குப்பைய போடறியா? புடி ‘return gift’

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி மன்றத்தலைவர் கூறுகையில், முதற்கட்டமாக நான்கு வார்டுகளில் மட்டுமே இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதன்படிவ் பொதுமக்கள் இன்னும் ஒத்துழைப்பு வழங்கினால் அனைத்து வார்டுகளிலும் தங்களது தூய்மைப்பணி தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.