புதுச்சேரியில் உள்ள மது பாரில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த இளைஞர்களும், உள்ளூர் இளைஞர்களும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணா சாலை – செயின்ட் தெரசா வீதி சந்திப்பில் உள்ள தனியார் மதுக்கடையில் நேற்றிரவு கேரளாவைச் சேர்ந்த 5 பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகே முதலியார்பேட்டை சேர்ந்த 6 பேர் மது அருந்திய நிலையில், போதையில் இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மதுபாட்டில்களால் தாக்கிக் கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.