மும்பை பிலிம் சிட்டியில் சிறுத்தை குட்டி மர்ம சாவு: வனத்துறை விசாரணை

மும்பை: மும்பை பிலிம் சிட்டியில் சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகரான கோரேகானில் ஃபிலிம் சிட்டி செயல்பட்டு வருகிறது. இங்கு சினிமா ஷூட்டிங் நடத்தப்படும். இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட் பகுதியில் சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு ெசன்ற வனத்துறையினர், ஃபிலிம் சிட்டியில் இறந்த நிலையில் கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பிலிம் சிட்டியில் எட்டு முதல் ஒன்பது மாத வயதுடைய சிறுத்தை குட்டி ஒன்று இறந்து கிடந்தது. சிறுத்தையின் தலையில் காயம் இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே முழு விபரங்கள் தெரியவரும். சுவாசக் கோளாறுகள் மற்றும் ரத்தப்போக்குடன் தலையில் ஏற்பட்ட காயத்தால் சிறுத்தை பலியாகி இருக்கலாம். வேட்டை கும்பலால் சிறுத்தை பலியாகி இருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.