மோடி அரசின் நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி-யில் இவ்வளவு இருக்கா..?

இந்தியா சீனாவுக்குப் போட்டியாக மிகப்பெரிய உற்பத்தி நாடாக மாறி வரும் நிலையில் ஏற்றுமதிக்கும், உற்பத்தி அடிப்படையிலான வளர்ச்சிக்கும் போக்குவரத்துக் கட்டமைப்பு மிகவும் முக்கியம், அதைவிட முக்கியமான மலிவான விலையில் போக்குவரத்துக் கட்டமைப்பு அவசியம்.

இந்த முக்கியமான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி புதிதாக நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி-ஐ அறிமுகம் செய்துள்ளார்.

இப்புதிய நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி மூலம் என்ன நடக்கும்..?

அமெரிக்காவையே மிஞ்சிய சீனா.. இந்தியாவுக்கு எது பெஸ்ட்!

நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி

நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி

இந்திய அரசு பல வருடத் திட்டமிடலுக்குப் பின்பு இறுதியாக இந்தியா ஒரு நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி-யை (NLP) அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கொள்கை திடீரென உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படவில்லை எட்டு ஆண்டுக்கால உழைப்புக்குப் பிறகு கொள்கை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 போக்குவரத்துக் கட்டமைப்பு

போக்குவரத்துக் கட்டமைப்பு

இந்தியா முழுவதும் விரைவான லாஸ்ட் மைல் டெலிவரி, போக்குவரத்துத் தொடர்பான சவால்களை முடிவுக்குக் கொண்டுவருதல், உற்பத்தியாளர்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் போக்குவரத்துக் கட்டமைப்பு மற்றும் விவசாயப் பொருட்களை வீணாக்காமல் நாடு முழுவதும் விரைவாகக் கொண்டு சேர்த்தல் போன்றவற்றை அடைவதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பிரதமர் மோடி
 

பிரதமர் மோடி

கொள்கை மற்றும் செயல்திறன் தான் வளர்ச்சி, இப்புதிய நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி மூலம் நாட்டின் வளர்ச்சிப் பாதை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும், மேலும் தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருளில் லாஜிஸ்டிக்ஸ் செலவு மட்டும் 13 சதவீதமாக உள்ளது, இதை விரைவில் ஒரு இலக்கு அளவிற்குக் கொண்டு வர உள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.

 ULIP தளம்

ULIP தளம்

யுனிஃபைட் லாஜிஸ்டிக்ஸ் இன்டர்ஃபேஸ் பிளாட்ஃபார்ம் (ULIP) என்பது இக்கொள்கையின் மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது. இது அனைத்து லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறையின் டிஜிட்டல் சேவைகளை ஒரே போர்ட்டல் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 வேகமாகச் செயல்பட முடியும்.

வேகமாகச் செயல்பட முடியும்.

இதன் மூலம் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தற்போதைய கடினமான கட்டமைப்பை விட்டு எளிதான வாய்ப்புகளைப் பெற முடியும் இதன் மூலம் செலவுகளும் குறையும் அதேபோல் வேகமாகவும் செயல்பட முடியும்.

இ-லாக்ஸ்

இ-லாக்ஸ்

ஈஸ் ஆப் லாஜிஸ்டிக்ஸ் சேவைகள் (இ-லாக்ஸ்), ஒரு புதிய டிஜிட்டல் தளம். இது தொழில்துறையினர், அரசு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான நேரடி செயல்பாடுகள் மற்றும் பிரச்சனைகளை விரைவாகத் தீர்க்க உருவாக்கப்பட்டு உள்ளது.

லாஜிஸ்டிக்ஸ் தளம்

லாஜிஸ்டிக்ஸ் தளம்

ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளவாட அமைப்புகள் இத்தளத்தில் லாஜிஸ்டிக்ஸ் தளத்தின் அனைத்து துறைகளையும் இணைப்பது மட்டும் அல்லாமல், நாட்டின் லாஜிஸ்டிக்ஸ் தரத்தை மேம்படுத்துவது குறித்துத் திட்டமிடப்படும்.

நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி ஒரு பாலம்

நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி ஒரு பாலம்

அனைத்திற்கும் மேலாக நேஷ்னல் லாஜிஸ்டிக்ஸ் பாலிசி மத்திய அரசின் கதி சக்தி திட்டம், பாரத்மாலா, சாகர்மாலா, சரக்கு நிர்வாகம் செய்யும் நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள், கிடங்கு நிறுவனங்கள் என அனைத்து துறையிலும் இணைந்து பணியாற்றும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

National Logistics Policy: How India’s logistics sector will change? What is key target?

National Logistics Policy: How India’s logistics sector will change? What is key target?

Story first published: Monday, September 19, 2022, 17:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.