ராணி இரண்டாம் எலிசபெத் இறந்த செய்தியை அரச குடுபத்தில் கடைசி ஆளாக இளவரசர் ஹரிக்கு அறிவிக்கப்பட்டது.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பிறகே அதுவும் சொல்லப்பட்டது.
ராணியின் மரண செய்தி பத்திரிக்கைகளுக்கு அனுப்படுவதற்கு வெறும் 5 நிமிடங்களுக்கு முன்னரே இளவரசர் ஹாரிக்கு தனது பாட்டியின் மரணம் குறித்து அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசக்குடும்பத்தில் ஒருவராக இருந்துமே இளவரசர் ஹரி ராணி காலமானதைக் கடைசியாக அறிந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு மேலாக, பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு தெரிவிக்கப்பட்ட பிறகே ஹரிக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.
இளவரசர் ஹரி, ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீனில் தரையிறங்குவதற்கு சற்று முன்பு, நடுவானில் விமான பயணத்தில் இருந்தபோது அவரது தந்தை மன்னர் மூன்றாம் சார்லஸிடமிருந்து தொலைபேசி அழைப்பின் மூலம் செய்தியைப் பெற்றார்.
ஹரிக்கும் அவரது குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட பிளவுக்கு இது மேலும் ஒரு உதாரணம் என்று உள்ளூர் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டன.
PA