சென்னை:
நடிகர்
ராமராஜன்
இரண்டாவது
இன்னிங்க்சை
தொடங்கும்
விதமாக
சாமானியன்
படத்தில்
நடித்து
வருகிறார்.
ராமராஜன்
நடித்த
கரகாட்டக்காரன்
படம்
வந்த
நேரம்
விமான
நிலையத்தில்
ராமராஜனை
விரட்டிப்பிடித்து
ஒரு
கேள்வி
கேட்டாராம்
கமல்
அதை
ராதாரவி
சுவைப்பட
தெரிவித்தார்.
ரஜினி,
கமலுக்கு
போட்டியாக
தமிழ்
திரையுலகில்
கொடி
கட்டி
பறந்தவர்
ராமராஜன்
இடையில்
விபத்து,
அரசியல்
ஈடுபாடு
என
திரையுலகில்
ஒதுக்கப்பட்டார்.
எம்ஜிஆர்
ஃபார்முலா
நாயகன்
ராமராஜன்
தமிழ்
திரையுலகில்
எம்ஜிஆர்
பாணி
என்று
ஒன்று
உண்டு.
பெரியவர்களை
மரியாதையுடன்
நடத்தணும்,
மதிக்கணும்,
பெண்களை
மதிக்கணும்,
தாயை
மதிக்கணும்.
வன்முறை
இல்லாத
காட்சிகள்
இருக்கணும்.
இனிமையான
பாடல்கள்
இருக்கணும்.
இதே
ஃபார்முலாவை
எம்ஜிஆருக்குப்பின்
அட்சர
சுத்தமாக
கடைபிடித்தவர்
ராமராஜன்.
அதனால்
தமிழகம்
முழுவதும்
ராமராஜனுக்கு
தனி
ரசிகர்
கூட்டம்
உண்டு.
தமிழகத்தின்
பி,சி
சென்டர்களில்
ஆதிக்கம்
செலுத்திய
நாயகன்
ராமராஜன்.
ரஜினிக்கு
அடுத்து
ராமராஜனை
நோக்கி
நகர்ந்த
தயாரிப்பாளர்கள்
ராமராஜன்
புகழின்
உச்சியில்
இருந்த
நேரத்தில்
ரஜினி
யிடம்
கால்ஷீட்
கிடைக்காத
தயாரிப்பாளர்கள்
அடுத்து
ராமராஜனை
நோக்கி
படையெடுத்த
வரலாறு
உண்டு.
அந்த
அளவுக்கு
தயாரிப்பாளர்களுக்கு
லாபம்
தரும்
நடிகராக
இருந்தார்.
அவருக்காகவே
அவரது
படத்தில்
இளையராஜா
போட்ட
பாடல்கள்
வேறு
ரகம்.
பாடல்களுக்காகவே
பல
படங்கள்
ஓடியது.
அதில்
முக்கியமான
படம்
கரகாட்டக்காரன்.
அந்த
படம்
ராமராஜனை
மட்டுமல்ல
பல
முன்னணி
நடிகர்களை
அசர
வைத்தது.
ஒருவருடம்
படம்
ஓடியது.
உதவி
இயக்குநர்
ராமராஜனிடம்
அன்றே
ஹீரோ
ஆவாய்
என்று
சொன்னேன்-ராதாரவி
இதுபற்றி
இன்று
நடந்த
ராமராஜன்
நடித்து
வரும்
சாமானியன்
பட
விழாவில்
பேசிய
நடிகர்
ராதாரவி
ராமராஜனுக்கும்
தனக்கும்
உள்ள
பழக்கம்
பற்றி
பேசினார்.
“ராமராஜனின்
பல
படங்களில்
அவருக்கு
அண்ணனாக,
வில்லனாக
பல
ரோல்களில்
நடித்திருக்கிறேன்,
அவ்வளவு
அமைதியானவர்
ராமராஜன்.
அவரை
உதவி
இயக்குநராக
இருக்கும்போதே
எனக்கு
தெரியும்.
ராமநாராயணனிடம்
உதவி
இயக்குநராக
இருந்தபோது
ஒரு
போட்டோ
ஒன்று
எடுத்திருந்தார்
அதை
பார்த்துவிட்டு
நான்
அன்றே
சொன்னேன்
நீ
ஒரு
ஸ்டாராக
வருவேய்யான்னு.
அது
பலித்தது”
என்று
பேசினார்.
ராமராஜனிடம்
கமல்ஹாசன்
வியந்து
கேட்ட
கேள்வி
ராமராஜன்
நடித்த
கரகாட்டக்காரன்
படம்
அப்படி
ஓடுச்சு.
ரஜினி
கமலுக்கு
எல்லாம்
ஒருவித
யோசனை
தான்.
இவர்
படம்
இந்த
அளவுக்கு
ஓடுதே
என்று.
அவர்
ஒன்று
இவர்களுக்கு
போட்டியில்லை.
இவர்
படம்
வேறு
ரகம்.
ஆனால்
இவர்
படங்கள்
அப்படி
ஓடுச்சு.
அந்த
நேரத்தில்
ஒரு
நாள்
விமான
நிலையத்தில்
கமல்ஹாசன்
வருகிறார்,
அப்போது
ராமராஜனும்
அங்கு
வருகிறார்.
அப்ப
திடீரென
கமல்ஹாசன்
ராமராஜனை
அழைத்தார்.
அருகில்
வந்த
ராமராஜன்
முடியை
இழுத்துப்
பார்த்து
ஒரிஜினல்
முடியா
என்று
கேட்டார்.
அது
மாதிரி
கமல்ஹாசனை
யோசிக்க
வைத்தவர்.
இப்பவும்
முடி
கொட்டாமல்
அப்படியே
இருக்கிறார்
என்று
சொல்ல
ராமராஜன்
சிரித்தார்.