ரூ.30 கோடி மோசடி செய்த சென்னை வங்கி அதிகாரிகள்.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

இந்தியாவில் உள்ள வங்கிகள் பெரும்பாலும் நல்ல முறையில் இயங்கி வந்தாலும் ஒரு சில அதிகாரிகளால் மோசடி நடைபெற்று வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் 30 கோடி ரூபாய் கடன் வழங்குவதில் மோசடி செய்த இந்தியன் வங்கியின் மூத்த அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை மோசடி செய்த வங்கி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 ஃபண்ட்ஸ்.. அட்டகாசமான 3 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. நீங்க முதலீடு?

ரூ.30 கோடி மோசடி

ரூ.30 கோடி மோசடி

சென்னை இந்தியன் வங்கியின் 4 மூத்த அதிகாரிகள் 30 கோடி ரூபாய் கடன் மோசடியில் ஈடுபட்டதை அடுத்து 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 4 வங்கி அதிகாரிகள் மற்றும் 2 பேருக்கு தலா ₹10,000 அபராதத்துடன் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

4 பேர் யார் யார்?

4 பேர் யார் யார்?

சென்னை இந்தியன் வங்கியின் தலைமை மேலாளர் அஜீஸ், மூத்த மேலாளர் ஜி.வி.சீனிவாசன், மூத்த மேலாளர் முத்தையா, பொது மேலாளர் எஸ்.அருணாச்சலம் ஆகியோருக்கு தலா ₹10,000 அபராதத்துடன் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

37 மாதங்கள் கடுங்காவல் தண்டனை
 

37 மாதங்கள் கடுங்காவல் தண்டனை

அதேபோல் M/s கிரண் ஓவர்சீஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த ரஞ்சீவ் பத்ரா மற்றும் அவரது மனைவி கிரண் பத்ரா ஆகிய இருவருக்கும் தலா ₹10,000 அபராதத்துடன் 37 மாதங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் சென்னை கிரண் ஓவர்சீஸ் லிமிடெட் மற்றும் டெல்லியில் உள்ள எம்/எஸ் கிரண் ஓவர்சீஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு தலா ₹10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புகார்

புகார்

சென்னை இந்தியன் வங்கி கிளையில் ரூ.30 கோடி மோசடி நடந்ததாக இந்தியன் வங்கியின் புகாரின் பேரில் புலனாய்வு நிறுவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தது. இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் M/s கிரண் ஓவர்சீஸ் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் மோசடி செய்து, சென்னை ஆயிரம் விளக்கு கிளை இந்தியன் வங்கிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டது.

போலி ஆவணங்கள்

போலி ஆவணங்கள்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் பொய்யான மற்றும் போலி ஆவணங்களை வங்கி கடனுக்காக வங்கியில் சமர்ப்பித்ததாகவும், இந்தியன் வங்கியின் அதிகாரிகளால் எந்தவிதமான அனுமதியின்றி இந்தியன் வங்கியின் நிதி நலன்களை பாதுகாக்காமல் கடன் தொகை வங்கி அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டது என்றும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதால், இந்தியன் வங்கிக்கு ₹39.18 கோடி இழப்பு ஏற்பட்டது.

ரத்து

ரத்து

இந்த மோசடி வழக்கின் விசாரணையின் போது, ​​இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட 4 பொது ஊழியர்கள் இறந்ததால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது.

 தண்டனை

தண்டனை

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு தண்டனை விதித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rs.30 crore fraud in loan scam: 4 bank official sent to jail!

Rs.30 crore fraud in loan scam: 4 bank official sent to jail! | ரூ.30 கோடி மோசடி செய்த சென்னை வங்கி அதிகாரிகள்.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

Story first published: Monday, September 19, 2022, 9:24 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.