மும்பை: சமீபத்திய காலமாக மும்பையில் ரியல் எஸ்டேட் வணிகமானது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது எனலாம். கொரோனாவின் வருகைக்கு பிறகு முடங்கியிருந்த ரியல் எஸ்டேட் மெல்ல மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக விலை அதிகமான சொகுசு வீடுகள் விற்பனையானது கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த சில மாதங்களாக மும்பையின் முக்கிய நகரங்களில் பிரபல பாலிவுட் நடிகர், நடிக்கைகள், தொழிலதிபர்கள் என பலரும் ரியல் எஸ்டேட்களில் (சொகுசு வீடுகளில்) முதலீடு செய்து வருகின்றனர்.
ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 ஃபண்ட்ஸ்.. அட்டகாசமான 3 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. நீங்க முதலீடு?
வீட்டில் விலை எவ்வளவு?
அந்த வகையில் தற்போது பிரபல சில்லறை விற்பனை நிறுவனமான டிமார்ட்டின் தலைமை செயல் அதிகாரியான, இக்னேஷியஸ் நவில் நோரேஹா, பாந்த்ராவின் கிழக்கு பகுதியில் 66 கோடி ரூபாய்க்கு இரு வீட்டை ரும்தோம்ஜியிடம் இருந்து வாங்கியுள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வீட்டிற்காக முத்திரை தாள் கட்டணம் மட்டும் 3.30 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2 வீடுகளுக்கு பதிவா?
இந்தியாவின் பணக்கார தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவரான நோரேஹா, மும்பையின் பாந்த்ராவில் தற்போது கட்டுமானம் நடந்து கொண்டு இருக்கும் ஒரு திட்டத்தில் 2 வீடுகளை புக் செய்துள்ளார்.
இந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளும் 8640 சதுர அடியில் ஒருங்கிணைந்த RERA கார்பெட் பகுதியைக் கொண்டுள்ளன. பல்வேறு சொகுசு வசதிகளைக் கொண்டுள்ள இந்த அடிக்குமாடி குடியிருப்புகளின் முழு அளவு 9552 சதுர அடியாக உள்ளது. இந்த வீட்டில் 10 கார்களுக்கு பார்க்கிங் வசதியினை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஏன் விலை அதிகம்?
இது BKC-யின் வணிக மையத்திற்கு அருகாமையில் உள்ள நிலையில் இதன் விலையும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இது குறித்து ரியல் எஸ்டேட் டெலப்பர் தரப்பில் இருந்தோ அல்லது நோரேஹா தரப்பில் இருந்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
பங்கு இருப்பு
கடந்த ஆண்டு அவென்யூ சூப்பர் மார்டின் பங்கு விலையானது நல்ல ஏற்றத்தினை கண்ட நிலையில், இந்தியாவின் பணக்கார மேலாளராக நேரோன்ஹா ஆனால். இவரின் வசம் அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் கிட்டதட்ட 2% பங்குகள் உள்ளன.
கடந்த அமர்வில் இப்பங்கின் விலையானது என் எஸ் இ-யில் 4.38% குறைந்து, 4327.55 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இதன் 52 வார உச்ச விலை 5900 ரூபாயாகும். இன்றும் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று சரிவினைக் காணலாமோ என்ற பதற்றமும் நிலவி வருகின்றது.
DMart CEO bought a house in Mumbai for 70 crores
DMart CEO who bought a house in Mumbai for 70 crores/ரூ.70 கோடிக்கு வீடா.. ரொம்ப காஸ்ட்லியா இருக்கே.. டிமார்ட் சிஇஒ அசத்தல்!