உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் மத்திய வங்கிகள் வட்டி விகிததை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் வல்லரசு நாடுகளில் ரெசிஷன் உருவாகும் என்று பிட்ச், உலக வங்கி, ஐஎம்எப் ஆகியவை எச்சரித்துள்ளது.
இந்த ரெசிஷன் 2008 போலவும், டெக் துறையில் ஏற்பட்ட Y2K பிரச்சனை போல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்த்து இருக்கும் போது டெக் மற்றும் ஐடி ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் டிசிஎஸ் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இது பணிநீக்கம் குறித்து அச்சத்தில் இருக்கும் அனைத்து டெக் ஊழியர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.
ரெஷசன் வரப்போகிறது.. புதிதாக ஊழியர்களை பணிக்கு எடுப்பதை நிறுத்திய FedEx!
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அடுத்த ஆண்டுக்குள் ஆசிய பசிபிக் சந்தை வர்த்தகத்தில் (இந்தியா உட்பட) தனது ஊழியர்கள் எண்ணிக்கையை 15 சதவிகிதம் அதிகரிக்கத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பள பிரச்சனை
COVID-19 தொற்றுநோய்க்குப் பின்பும், ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம் குறைந்த பிறகு சந்தைகள் திறக்கப்படுவதால் அதிகப்படியான ஊதிய பிரச்சனைகள் படிப்படியாகக் குறைந்து வரும் காரணத்தால் புதிய ஊழியர்களை அதிகளவில் சேர்க்க வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக டிசிஎஸ் ஆசிய பசிபிக் தலைவர் கிரிஷ் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள்
கொரோனா தொற்றுக் காலத்தில் ஊழியர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருந்த காரணத்தால் ஊதிய பிரச்சனை மிகவும் பெரியதாக இருந்தது, ஆனால் தற்போது நிலைமை சீராகியிருக்கும் காரணத்தால் பல சந்தையில் கொரோனாவுக்கு முந்தைய சம்பள அளவிலேயே ஊழியர்கள் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
10000கன்சல்டென்ட்கள்
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் டிசிஎஸ் 10000 அதிகமான கன்சல்டென்ட்களைப் பணியில் நியமிக்கப்பட்டது, இதேபோன்று இந்த ஆண்டும் பணியில் நியமிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும், நிறுவனத்தின் டிஜிட்டல் ஆப்டிமைசேஷன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக டிசிஎஸ் ஆசிய பசிபிக் தலைவர் கிரிஷ் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
50 பில்லியன் டாலர் இலக்கு
2030க்குள் டிசிஎஸ் 50 பில்லியன் டாலர் அளவிலான வருடாந்திர விற்பனையை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதில் டிஜிட்டல் ஆப்டிமைசேஷன் முதன்மையாகவும், இதைத் தொடர்ந்து கிளவுட், சைபர் செக்யூரிட், வாடிக்கையாளர் சேவை மேம்பாடு ஆகியவை முதன்மையாக விளங்குகிறது.
TCS plans to increase employee count by 15 percent even though recession fear is high
TCS plans to increase employee count by 15 percent even though recession fear is high