5லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்? மின்கட்டம் உயர்வுக்கு எதிராக 4வது தொடரும் விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்

கோவை: தமிழகஅரசின் மின்கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் இன்று 4வது நாளாக நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது..

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, வீட்டுவரி, குடிநீர் கழிவுநீர் வரி என பல வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் மாதம் ஒரு முறைசெலுத்தும் முறை கொண்டு வரப்படும் என கூறிவிட்டு, தற்போது, தனது அறிவிப்புக்கு மாறாக, மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி உள்ளது. இது பொதுமக்கள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும்  பொது அடிப்படையில் 30 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 6 சதவிகிதம் உயர்வு எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு விறைதறி நிறுவனங்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. ஏற்கனவே வருமானம் இன்றி தவிக்கும் விசைத்தறி உரிமையாளர்கள் இந்த மின்கட்டணத்தை செலுத்த இயலாது என்று தெரிவித்தனர். இந்த மின்கட்டண உயர்வு தொடர்ந்தால் நெசவு தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறியதுடன்,  மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி  கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் காவலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் இன்று நான்காவது நாளாக தொடர்கிறது.  கோவை அருகே உள்ள அவிநாசி, தெக்கலூர், சாமளாபுரம் மற்றும் கோவை மாவட்டத்தில் சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள 2 லட்சம் விசைத்தறியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த மின்கட்டண உயர்வால் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் 130 கோடி ரூபாய் மதிப்பிலான 4 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 5 லட்சம் தொழிலாளர்கள் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.