தங்கம் (gold price) விலையானது கடந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வந்த நிலையில், வார இறுதியில் சற்று ஏற்றத்தில் முடிவடைந்தது. இதற்கிடையில் இன்று எப்படியிருக்குமோ? என்ற பெரும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையில் இன்றும் தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சரிவிலேயே காணப்படுகின்றது. இது குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பா? தங்கம் விலை இன்னும் குறையுமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன?
இன்று சர்வதேச சந்தையில் என்ன நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கம் விலை நிலவரம் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
தொடர் சரிவில் இருக்கும் தங்கம் விலை.. இன்று விலை எப்படியிருக்கு.. இனி எப்படி இருக்கு?
தங்கம் விலை சரிவு
இன்று காலை தொடக்கத்திலேயே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சரிவிலேயே காணப்பட்டது.இதனையடுத்து இந்திய சந்தையிலும் சரிவில் தான் காணப்படுகின்றது. இது கிட்டதட்ட 6 மாத சரிவில் காணப்படுகின்றது. எம் சி எக்ஸ் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 49,237 ரூபாய் என்ற லெவலிலும், வெள்ளி விலை கிலோவுக்கு 56,820 ரூபாய் என்ற லெவலிலும் காணப்பட்டது.
என்ன காரணம்?
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது வலுவாக காணப்படும் நிலையில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது. எனினும் வரவிருக்கும் நாட்களில் தங்கத்திலும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம் கண்டு வரும் நிலையில், பத்திர சந்தையும் ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வட்டி அதிகரிப்பு
கடந்த வாரத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே 3% அல்லது 1500 ரூபாய் சரிவினைக் கண்டு இருந்தது. இதற்கிடையில் முதலீட்டாளார்களின் கவனம் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது. இந்த கூட்டத்தில் 75 – 100 அடிப்படை புள்ளிகள் வரையில் வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைய வழிவகுக்கலாம். மாறாக பத்திரங்களில் முதலீடுகள் அதிகரிக்கலாம்.
மேலும் அழுத்தம் இருக்கலாம்
எப்படியிருப்பினும் செப்டம்பர் மாதத்தில் பணவீக்க விகிதம் ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு சரியலாம் என்ற எதிர்பார்பார்ப்பு நிலவி வருகின்றது. ஒரு வேளை நிபுணர்கள் கணிப்பதை போல பணவீக்கம் அதிகரித்தால், அது தொடர்ந்து வட்டியை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது டாலரின் மதிப்பு ஏற்றம் காண வழிவகுக்கலாம். இது தங்கம் விலையில் மேற்கொண்டு அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
காமெக்ஸ் தங்கம் விலை?
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸூக்கு 6.05 டாலர்கள் குறைந்து, 1677.45 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட மேலாகவே தொடங்கியுள்ளது. அதேசமயம் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறைந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 0.36% அதிகரித்து, 19.450 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகவே கேப் அப் ஆகி தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று தடுமாறினாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 145 ரூபாய் குறைந்து, 49,235 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலை, குறைந்த விலையையும் உடைக்கவில்லை. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், மீண்டும் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 133 ரூபாய் அதிகரித்து, 56,856 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் மீண்டும் அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்தே காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு, 8 ரூபாய் குறைந்து, 4632 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 64 பாய் குறைந்து, 37,056 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து, 5053 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 72 ரூபாய் குறைந்து, 40,424 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து, 50,530 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று இதுவரையில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 62 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 620 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 62,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.46,320
மும்பை – ரூ.45,850
டெல்லி – ரூ.46,000
பெங்களூர் – ரூ.45,900
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.46,320
gold price on 19th September 2022: gold prices fall nearly in 6 month low
gold price on 19th September 2022: gold prices fall nearly in 6 month low