சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மல்லிப்பூ பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது நன்றியை ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.
சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா, நீரஜ் மாதவ், சித்திக் ஆகியோர் நடிப்பில் கடந்த 15-ம் தேதி வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆண்டனி படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார். ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்திருந்தது. வழக்கமான கதைதான் என்றாலும், சிம்புவின் நடிப்பும், ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும் படத்திற்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தன.
குறிப்பாக கவிஞர் தாமரை பாடல் வரிகளில், மதுஸ்ரீயின் குரலில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளியான ‘மல்லிப்பூ’ பாடல் அமோக வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதத்தால், திரையரங்குகளில் இந்தப் பாடல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அத்துடன் சமூகவலைத்தள ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலத்தில் இந்தப் பாடலின் வைப்(vibe) தான் கடந்த சில நாட்களாக எங்கும் காணப்படுகின்றது. 5 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ள நிலையில், படத்தின் பின்னணி இசை மற்றும் மல்லிப்பூ பாடலுக்காக ரசிகர்கள், பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you Audience, Press Friends, Fans for the unanimous love & positivity to #VendhuThaninthathuKaadu, the songs and the background score. #Mallipoo @SilambarasanTR_ @menongautham @IshariKGanesh @Udhaystalin @Think__MusicInd Team #VTK for the big success. EPI
— A.R.Rahman (@arrahman) September 19, 2022