ஆட்சியர் அலுவலகத்தில் நூதனமாக கொள்ளையடித்த திருடன்

கடலூர்:
டலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்சியரை சந்திக்க வந்தவர்களிடம், நீங்கள் நகை அணித்து இருந்தால் வேலை கிடைக்காது என கூறிய மர்ம நபர், அவர்களிடம் இருந்து நகைகளை கொள்ள அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்சியரை சந்திக்க வந்தவர்களிடம், ஆட்சியரை பார்க்கும் போது நகை அணிந்து வரக் கூடாது என்றும், நீங்கள் போட்டிருக்கும் நகைகளை கழற்றி என்னிடம் கொடுத்து விடுங்கள் என்ற கூறியுள்ளார். இதை நம்பிய பொதுமக்கள் நகைகளை கழற்றி கொடுத்து விட்டு சென்றுள்ளனர்.

ஆட்சியரை சந்தித்து விட்டு வெளியே வந்த பார்த்த போது, தங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை அவர்கள் அறிந்து கொண்டார்.

ஆட்சியர் அலுவலகத்திலேயே நூதனமாக கொள்ளையடித்த திருடன், பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.