இன்னுமா Floppy Disk பயன்டுத்துறாங்க.. விற்பனை அமோகமாம்..!

உலகளவில் டேட்டா ஸ்டோரேஜ் செய்யும் முறை பெரிய அளவில் மாறியுள்ளது.

பென்டிரைவ், மெமரிகார்டு, கிளவுட், ஹார்டு டிஸ்க் எனப் பல வந்துள்ள நிலையில் இன்னும் சில முக்கியத் துறையில் 20 வருடத்திற்கு முன்பு மிகவும் பிரபலமாக இருந்த Floppy Disk பயன்படுத்துவது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்..?

எந்தத் துறையில் அதிகளவில் Floppy Disk பயன்டுத்துறாங்க தெரியுமா..? முடிந்தால் கெஸ் பண்ணுங்க பார்ப்போம்.

ரூ.20,000 கோடி அரச குடும்பத்து சொத்து.. 30 வருட வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

Floppy Disk

Floppy Disk

இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கும் Floppy Disk என்றாலே என்னவென்று தெரியாத அளவிற்குக் காலம் மாறியிருக்கும் நிலையில் வல்லரசு நாடான அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் இன்னமும் Floppy Disk பயன்படுத்தும் துறைகளும், சேவைகளும் உள்ளது.

டாம் பெர்ஸ்கி

டாம் பெர்ஸ்கி

இப்படி உலகிலேயே Floppy Disk விற்பனை செய்யும் கடைசி நிறுவனமாக மாறியுள்ளது டாம் பெர்ஸ்கி-யின் FloppyDisk.com நிறுவனம். இந்த நிறுவனம் Floppy Disk விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் ரீ-சைக்கிள் செய்கிறது. இது மட்டும் அல்லாமல் தொடர்ந்து நிலையான வர்த்தகத்தைப் பெற்று வருவதாகவும் தெரித்துள்ளார் டாம் பெர்ஸ்கி.

விமானப் போக்குவரத்துத் துறை
 

விமானப் போக்குவரத்துத் துறை

டாம் பெர்ஸ்கி-யின் FloppyDisk.com நிறுவனத்திற்கு முக்கிய வாடிக்கையாளராக இருப்பது விமானப் போக்குவரத்துத் துறை தான். மேலும் நிறுவனத்திற்கு வரும் பெரும்பாலான வருமானம் தொழிற்துறை நிறுவனங்களிடம் இருந்து தான், ரீடைல் விற்பனை குறைவு.

1990களில் பிரபலம்

1990களில் பிரபலம்

உதாரணமாக 1990களில் தொழில்நுட்ப வளர்ச்சியும், தொழில்நுட்ப மாற்றங்களும் உச்சத்தைத் தொட்ட வேளையில் ஒரு தொழிற்துறை இயந்திரத்தையோ அல்லது முக்கியமான டிஜிட்டல் கருவிகளோ தயாரிக்க வேண்டும் என்றால் அடுத்த 50 வருடத்திற்கு அதை இயக்கும் வண்ணம் சந்தையில் இருக்கும் புதிய தொழில்நுட்பத்தை வைத்துத் தயாரிப்போம்.

50 சதவீத விமானங்கள்

50 சதவீத விமானங்கள்

அந்த வகையில் விமானத் துறையில் தற்போது உலக நாடுகளில் இயங்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான விமானங்கள் அனைத்தும் 20 வருடங்களுக்குப் பழமையானது. இதில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் தங்களது இயந்திரத்தில் Floppy Disk-ஐ பயன்படுத்தித் தகவல் சேமிக்கும் இயந்திரங்களைத் தான் தயாரித்து இயக்கி வருகிறது.

மருத்துவத் துறை கருவி

மருத்துவத் துறை கருவி

இப்படியிருக்கையில் Floppy Disk பயன்பாட்டில் இல்லை என்பதற்காக உலகின் 50 சதவீத விமானங்களை மாற்ற முடியாது என்பதால் இன்னமும் Floppy Disk விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சில மருத்துவத்துறை கருவிகளும் இன்னும் Floppy Disk-ஐ பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார் டாம்.

ஜப்பான்

ஜப்பான்

மேலும் பழைய பொருட்களைச் சேகரிப்போர் 10, 20, சில நேரம் 50 Floppy Disk-களை வாங்குவது வழக்கம் எனக் கூறினார் FloppyDisk.com நிறுவனத்தின் தலைவர் டாம் பெர்ஸ்கி. மேலும் இந்த மாத துவக்கத்தில் Floppy Disk, CD-களைப் பயன்படுத்தவதை விரைவில் நிறுத்த வேண்டும் என ஜப்பான் டிஜிட்டல் அமைச்சர் டாரோ கானோ தெரிவித்தார்.

1971 முதல் 2000

1971 முதல் 2000

ஐபிஎம் தரவுகள் படி ஃப்ளாப்பி டிஸ்க் 1971 இல் கண்டுபிடிக்கப்பட்டது, 1980-களில் தகவல்களைச் சேமிப்பதற்கும் பகிர்வதற்கும் மற்றும் ப்ரோகிராம்-களை இயக்குவதற்கும் முக்கிய வழியாக இருந்து. ஃப்ளாப்பி டிஸ்க் 2000-களில் சிடி-கள், டிவிடி-கள் மற்றும் USB ஸ்டிக்குகள் பயன்பாட்டுக்கு வந்த பின்பு பயன்பாட்டில் பெரிய அளவில் குறைந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

floppy-disk are selling till today; many industries rely on this extinct storage disk

floppy-disk are selling till today; many industries rely on this extinct storage disk. Do you know which industries are using floppy-disk

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.