டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். ஓபிஎஸ் உடன் மோதல் தொடரும் நிலையில் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்து ஈபிஎஸ் விவாதித்தகக தகவல் அளித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோரும் அமிதாஷாவை சந்தித்தனர். டெல்லி உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நிடித்துள்ளது.
*எடப்பாடி பேட்டி
உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது பற்றி அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு பற்றி அமிதாஷாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை பற்றி உள்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது பற்றி அமித்ஷாவிடம் கூறினேன் என்று ஈபிஎஸ் கூறியுள்ளார். அமித்ஷா உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.