மொத்த ராஜகுடும்ப உறுப்பினர்களும் ஒன்றிணைந்து விண்ட்சர் மாளிகையில் ராணியாரை நல்லடக்கம் செய்துள்ளனர்.
ஹரியை ஏறெடுத்து பார்க்க, ஹரியும் சார்லோட் நோக்கி முகத்தை திருப்ப, பின்னர் மிருதுவாக புன்னகைத்துள்ளார் ஹரி.
விண்ட்சர் மாளிகையில் நேற்று குடும்ப உறுப்பினர்கள் மட்டும் ராணியாருக்கு இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கும் போது ஹரியுடன் குட்டி இளவரசி சார்லோட் கண்காளால் பேசிக்கொண்டது தற்போது வெளியாகியுள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் உலக நாடுகளில் இருந்து 2,000 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ராணியார் இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டது.
@getty
இதனையடுத்து, மன்னர் சார்லஸ், வேல்ஸ் இளவரசர் வில்லியம், ஹரி உட்பட மொத்த ராஜகுடும்ப உறுப்பினர்களும் ஒன்றிணைந்து விண்ட்சர் மாளிகையில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக்கு பின்னர் ராணியாரை நல்லடக்கம் செய்துள்ளனர்.
இந்த சந்திப்பின் போதே அருகருகே அமர்ந்திருந்த குட்டி இளவரசி சார்லோட் மற்றும் ஹரி கண்களால் பேசிக்கொண்டுள்ளனர்.
கடந்த 2020ல் ஹரி- மேகன் தம்பதி அமெரிக்காவுக்கு குடியேறிய பின்னர், பிரித்தானியா திரும்பிய தருணங்களில் தற்போதைய வேல்ஸ் இளவரசரின் பிள்ளைகளை இளவரசர் ஹரி நேரிடையாக சந்தித்ததில்லை என்றே கூறப்படுகிறது.
@getty
இந்த நிலையில், ராணியாருக்கான இறுதி அர்ப்பணிப்பு நிகழ்வில் தமது மாமாவான ஹரியுடன் கண்களால் பேசியுள்ளார் சார்லோட்.
தனது தலையில் இருந்த தொப்பியை சரி செய்தவர் தற்செயலாக தமது மாமாவான ஹரியை ஏறெடுத்து பார்க்க, அதே நொடியில் ஹரியும் சார்லோட் நோக்கி முகத்தை திருப்ப, பின்னர் மிருதுவாக புன்னகைத்துள்ளார் ஹரி.
இது உண்மையில் நெகிழ வைக்கும் தருணம் என்றே ராஜகுடும்பத்து ஆதரவாளர்களால் கொண்டாடப்படுகிறது.
முதலில் ராணியாரின் இறுதிச்சடங்குகளில் குட்டி இளவரசர் ஜோர்ஜ் மற்றும் சார்லோட் கலந்து கொள்வார்களா என்பதே சந்தேகமாக இருந்தது.
@getty
பின்னர், தந்தையான வில்லியம் பிடிவாதமாக இருவரையும் பங்கெடுக்க வைத்துள்ளார். ராணியாரின் இறுதிச்சடங்குகள் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட போது குட்டி இளவரசி சார்லோட் கண்ணீர் விட்டது பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.
மேலும், உறவினரான சோஃபி வெசெக்ஸ் தொடர்ந்து குட்டி இளவரசியை அரவணைத்து தேற்றி வந்துள்ளது நேரலையில் பதிவாகியிருந்தது.