கமல்ஹாசனை தலைவரேன்னு சொன்ன மணிரத்னம்.. பொன்னியின் செல்வன் ரன்னிங் டைமுக்கு இப்படியொரு விளக்கமா?

சென்னை: அடுத்த வாரம் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தை புரமோட் செய்ய இன்னும் ஒரு வாரத்திற்கு ஏகப்பட்ட இடங்களுக்கு பொன்னியின் செல்வன் படக்குழு பயணம் மேற்கொள்கிறது.

பெரிய படங்களுக்கு புரமோஷன் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் ராஜமெளலி எடுத்துக் காட்டிய நிலையில், பல பெரிய படங்களை இயக்கும் இயக்குநர்களும் அதே வழியை சரியாக கடைபிடித்து வருகின்றனர்.

இந்நிலையில், புரமோஷன் சந்திப்பில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கமல்ஹாசனை தலைவரேன்னு சொன்ன வீடியோ ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மணிரத்னம் சாதனை

எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன், ராஜமெளலி என பெரும் ஜாம்பவான்கள் பலரும் பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்று நினைத்து முடியாமல் போன நிலையில், அதனை இரண்டு பாக படங்களாக குறுகிய காலக்கட்டத்தில் மல்டி ஸ்டார்களை வைத்து பிரம்மாண்ட படமாக இயக்கி சாதித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

கமல் வாய்ஸ் ஓவர்

கமல் வாய்ஸ் ஓவர்

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்தது. அதற்கு காரணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என ஆரம்பிக்கும் கமல்ஹாசனின் கம்பீர வாய்ஸ் ஓவர் தான். வெந்து தணிந்தது காடு படத்தில் கூட கமலின் வாய்ஸ் ஓவருக்கு கெளதம் மேனன் பிளான் போட்டிருந்ததாகவும், பொன்னியின் செல்வன் டிரைலர் பாதிக்கக் கூடாது என அதை கைவிட்டதாகவும் பேசியிருந்தார்.

தலைவரே

தலைவரே

பொன்னியின் செல்வன் படத்திற்காக ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட நடிகர்கள் பரபரப்பாக புரமோஷன் செய்து வருகின்றனர். இயக்குநர் மணிரத்னமும் இவர்களை அழைத்துக் கொண்டு பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பிரஸ் மீட்டில் பேசிய போது கமல்ஹாசனை உதாரணமாக ஒரு விஷயத்தில் சொல்வதற்காக தலைவரே அதை செஞ்சிருக்காரே என மணிரத்னம் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

PS1 ரன்னிங் டைம்

PS1 ரன்னிங் டைம்

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 46 நிமிடம் எனக் கூறப்படுகிறது. முதல் பாகமே இவ்வளவு பெரிய படமா? என்கிற கேள்வியை இயக்குநர் மணிரத்னத்திடம் முன் வைக்க, விக்ரம் படம் எவ்வளவு நேரம் ஓடிச்சி என மணிரத்னம் கேட்க 2 மணி நேரம் 54 நிமிடம் என பதில் வர, தலைவரே நமக்கு முன்னாடி அதை சாதிச்சிருக்காரே என மணிரத்னம் பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

நீளம் படத்தை பாதிக்குமா

நீளம் படத்தை பாதிக்குமா

3 மணி நேரம் படத்தை எடுத்தாலும், ரசிகர்கள் என்கேஜாக ஒவ்வொரு காட்சி நகர்வும் அமைந்து விட்டால் பெரிய பாதிப்பாக இருக்காது. பல மணி நேர வெப்சீரிஸையே விறுவிறுப்பாக இருந்தால் தொடர்ந்து ஒவ்வொரு எபிசோடாக பார்த்து முடித்து விடுகின்றனர். ஆனால், அதே சமயம் விறுவிறுப்பாக இல்லாமல் போர் அடித்தால் படத்தின் நீளம் பெரிய பிரச்சனையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.