கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜார்கண்ட் மாநிலத்தில் மாத தவணையில் மஹிந்திரா டிராக்டர் வாங்கிய விவசாயி ஒருவர் இஎம்ஐ செலுத்தவில்லை.
இதன்காரணமாக லோன் ஏஜன்ட் வாகனத்தை கைப்பற்ற முயன்ற போது நடந்த பரபரப்பில் கர்ப்பிணிப் பெண் மீது வாகனம் ஏற்றப்பட்டது. இதனால் அந்த கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மஹிந்திரா குழுமம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரே ஒரு அப்பளத்திற்கு இந்த அக்கப்போரா? ஆனந்த் மஹிந்திரா-வின் ட்விட் செம டிரெண்ட்..!
மஹிந்திரா ஃபைனான்ஸ்
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹசாரிபாக் என்ற பகுதியில் விவசாயி ஒருவர் மஹிந்திரா தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் டிராக்டர் ஒன்றை தவணைமுறையில் வாங்கினார். அந்த விவசாயி ஒரு மாற்றுத்திறனாளி என்று தெரிகிறது. அவர் தனது கடன் தவணையை முறையாக செலுத்த தவறியதாகவும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடன் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
லோன் ஏஜண்ட்
இதனையடுத்து வாகனத்தை மீட்க லோன் ஏஜன்ட் முடிவு செய்து தங்களிடமிருந்த மாற்றுச்சாவியை பயன்படுத்தி டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த விவசாயி, லோன் ஏஜன்ட்டை மறித்து நியாயம் கேட்டுள்ளார். அவருடன் அவரது 27 வயது கர்ப்பிணி மகளும் இருந்துள்ளார்.
கர்ப்பிணி உயிரிழப்பு
இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விவசாயியின் மகள் டிராக்டரை மறித்துள்ளார். ஆனால் அதையும் மீறி டிராக்டரை லோன் ஏஜண்ட் இயக்கிய நிலையில் எதிர்பாராத வகையில் கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏறியதால் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.
கொலை வழக்கு
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை இதுகுறித்து விசாரணை செய்து கொலை வழக்காக பதிவு செய்துள்ளது. லோன் ஏஜன்ட் மற்றும் நிதி நிறுவன மேனேஜர் உள்பட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வருத்தம் தெரிவித்து அறிக்கை
இந்த நிலையில் மஹிந்திரா குழும தலைமைச் செயல் அதிகாரி இதுகுறித்து வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ஜார்கண்ட் சம்பவம் எங்களை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது என்றும் இந்த வழக்கின் விசாரணைக்கு நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது என்றும், இந்த சம்பவத்தை அனைத்து கோணங்களிலும் நாங்கள் விசாரிப்போம் என்றும், மேலும் தற்போதுள்ள மூன்றாம் தரப்பு வசூல் நிறுவனங்களைப் பயன்படுத்தும் நடைமுறையையும் நாங்கள் ஆய்வு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளது.
தூக்கு தண்டனை
இந்த நிலையில் ஜார்க்கண்ட் சம்பவத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் தந்தை, தனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் எனக்கு இருந்து எந்த ஒரு இழப்பீடும் வேண்டாம் என்றும், என் மகளின் மரணத்திற்கு நீதி மட்டுமே நான் கேட்கிறேன் என்றும் தெரிவித்தார்.
Pregnant woman run over tractor by Agent.. Mahindra issues statement!
Pregnant woman run over tractor by Agent.. Mahindra issues statement! | கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றிய லோன் ஏஜண்ட்.. வருத்தம் தெரிவித்த மஹிந்திரா குழுமம்