இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் UPI சேவை பயன்படுத்தத் திட்டமிட்டும் அதற்கான பணிகளைச் செய்து வரும் இந்நிலையில் இந்தியாவில் முக்கியமான ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது.
இந்திய UPI சேவை தளத்தில் சில நிறுவனங்கள் மட்டுமே பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது ஆரம்பம் முதல் மத்திய அரசுக்கும், UPI தளத்தை நிர்வாகம் செய்யும் NPCI அமைப்புக்கும் பிரச்சனையாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக வெளிநாடு நிறுவனங்கள் மோனோபோலியாக இருப்பதைக் கடுமையாக எதிர்கிறது.
இந்தக் கேப்-ஐ பயன்படுத்தி ஸ்விக்கி, சோமேட்டோ நுழைய திட்டமிட்டு உள்ளது.
இந்தியாவில் ஹைட்ரஜன் ரயில் எப்போது வரும்..? ரயில்வே அமைச்சர் தகவல்
UPI சேவை
UPI சேவை தளத்தில் இருக்கும் நிறுவனங்களுக்குச் சந்தையில் அதிகப்படியாக 30 சதவீத வர்த்தகத்தைப் பெற வேண்டும் எனக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் பல புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் உருவாகும்.
கூகுள் பே மற்றும் போன்பே
இந்திய பேமெண்ட் தளத்தில் வெளிநாட்டு நிறுவனங்களான கூகுள் பே மற்றும் போன்பே ஆரம்பம் முதல் ஆஃபர், போனஸ் தொகை என அறிவித்து இந்திய வாடிக்கையாளர்களைப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது.
ஸ்விக்கி, சோமேட்டோ
இதனால் பிற நிறுவனங்கள் வளர்ச்சி அடைய முடியாமல் மாட்டிக்கொண்டு விழித்து வருகிறது. மேலும் மத்திய அரசுக்கும் இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் மோனோபோலியாக இருப்பதில் விருப்பம் இல்லை. இந்த நிலையில் ஸ்விக்கி, சோமேட்டோ புதிதாக UPI பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
30 சதவீதம் கட்டுப்பாடு
NPCI அமைப்பு 30 சதவீதம் அதிகமாகச் சந்தை வர்த்தக ஆதிக்கம் என்ற கட்டுப்பாட்டை ஜனவரி 2023 முதல் அமலாக்கம் செய்யத் திட்டமிட்டு வரும் நிலையில், இதை 3 வருடமாவது ஒத்திவைக்க வேண்டும் எனப் போன்பே கோரிக்கை வைத்துள்ளது. இதேபோல் கூகுள் பே நிறுவனமும் கோரிக்கை வைத்துள்ளது. இது இரண்டுமே அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
போன்பே
ஆகஸ்ட் மாத தரவுகள் படி போன்பே 3.14 பில்லியன் பணப் பரிமாற்றங்கள் உடன் 48 சதவீத சந்தையையும், கூகுள் பே 2.2 பில்லியன் பேமெண்ட்கள் உடன் 34 சதவீத சந்தையும் வைத்துள்ளது.
வாஸ்ட்அப் பே
சமீபத்தில் அறிமுகமான வாஸ்ட்அப் பே 1 சதவீதத்திற்கும் குறைவான சந்தையை மட்டுமே பெற்றுள்ளது.பேடிஎம் 871 மில்லியன் பேமெண்ட்கள், அமேசான் பே 62 மில்லியன் பேமெண்ட்களைப் பெற்றுள்ளது.
80 சதவீத சந்தை
இப்படிப் போன்பே, கூகுள் பே மட்டுமே 80 சதவீத வர்த்தகச் சந்தையைக் கொண்டு இருக்கும் நிலையில் NPCI அமைப்பின் 30 சதவீத வர்த்தகச் சந்தை கட்டுப்பாட்டு விதிமுறையைக் கொண்டு வந்தால் மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும், அதேபோல் மோனோபோலி நிலை எளிதாகத் தீர்க்க முடியும்.
உணவு டெலிவரி நிறுவனங்கள்
இந்த விதிமுறை ஜனவரி 2023 முதல் நடைமுறைக்கு வந்தால் புதிய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் அதிகம், இதைப் பயன்படுத்திக்கொள்ள உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ ஆகியவை புதிதாக UPI சேவை தளத்தைத் துவங்க திட்டமிட்டு வருகிறது.
NPCI calls Modi Govt for UPI market share cap; Google pay, phonepe worried, Swiggy and Zomato plans to enter
NPCI calls Modi Govt for UPI market share cap; Google pay, phonepe worried, Swiggy and Zomato plans to enter