சற்றுமுன் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு! இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை (Live)


நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிலையில் மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.30 வரை “தேசியப் பேரவையை” ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது.

பார்வையாளர் கூடம் திறப்பு

இதேவேளை நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்று நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் நாடாளுமன்றை பார்வையிட இதுவரை விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பில் படைக்கல சேவிதரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் கடந்த 14ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சற்றுமுன் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு! இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை (Live) | Parliament Session Start In Sri Lanka

இதற்கமைய முதற்கட்டமாக நாடாளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட நாடாளுமன்றத்தை பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு அனுமதியை வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறை

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதிக்கு வருகைதர முடியும்.

சற்றுமுன் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு! இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும் நடைமுறை (Live) | Parliament Session Start In Sri Lanka

இதற்கமைய, முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 3 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.