இளவரசி மேரியின் கணவர் ஃபிரடெரிக், தாயார் இரண்டாம் மார்கரெட் ராணி ஆகியோர் மட்டும் முதல் வரிசையில்
டென்மார்க் ராஜகுடும்பம் தரப்பிலும் இந்த விவகாரத்தில் தாங்கள் மனமுடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய ராணியாரின் இறுதிச்சடங்கில் டென்மார்க் ராஜகுடும்பத்தினர் பங்கேற்றுள்ள நிலையில், பட்டத்து இளவரசியான மேரிக்கு அழைப்பு விடுக்கப்படாதது தற்போது டென்மார்க்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்தின் வருந்தத்தக்க பிழை காரணமாகவே பட்டத்து இளவரசியான மேரி இறுதிச்சடங்குகளில் பங்கேற்க தவறியதாக கூறப்படுகிறது.
@getty
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் இளவரசி மேரியின் கணவர் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக் மற்றும் அவரது தாயார் இரண்டாம் மார்கரெட் ராணி ஆகியோர் மட்டும் முதல் வரிசையில் காணப்பட, பலர் அவுஸ்திரேலியாவில் பிறந்த இளவரசி மேரி தொடர்பில் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கு டென்மார்க் ராஜகுடும்பம் மொத்தமும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நான்கு பிள்ளைகளின் தாயாரான 50 வயது இளவரசி மேரி மட்டும் விடுபட்டுள்ளார்.
@getty
இதனிடையே, ஒரு குடும்பத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி என்பதால் இளவரசி மேரி கலந்துகொள்ளாமல் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.
டென்மார்க் ராஜகுடும்பம் தரப்பிலும் இந்த விவகாரத்தில் தாங்கள் மனமுடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், தவறிழைக்கப்பட்டுள்ளதை பிரித்தானிய தரப்பு ஒப்புக்கொண்டதுடன், கண்டிப்பாக இந்த விவகாரம் மனக்கசப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை தான் என குறிப்பிட்டுள்ளது.
@getty
ராணியார் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் 20க்கும் மேற்பட்ட ராஜகுடும்பத்தில் இருந்து உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பயணங்களை மிக மிக அரிதாகவே மேற்கொள்ளும் ஜப்பான் பேரரசரான நருஹிட்டோவும் ராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.