சீரியல் பரிதாபங்கள்..ஐஏஎஸ் தேர்வு இண்டர்வியூ என நடக்கும் காமெடி காட்சி..சமூக வலைதளத்தில் கிண்டல்

தமிழ்
சீரியல்கள்
அட்ராசிட்டி
சகிக்க
முடியாத
அளவுக்கு
செல்கிறது.
கதை
என்றாலும்
நடக்கும்
சம்பவங்களில்
உண்மைத்தன்மையைக்
கூட
கடை
பிடிப்பதில்லை.

நடைமுறையில்
இருக்கும்
சம்பவங்களை
பற்றி
பேசிவந்த
சீரியல்கள்
சினிமா
ரேஞ்சுக்கு
மருத்துவமனையை
தீவிரவாதிகள்
கைப்பற்றுவது,
துப்பாக்கி
சண்டை
ரேஞ்சுக்கு
போய்விட்டார்கள்.

இதில்
தற்போதைய
அதிர்ச்சி
தரும்
விஷயம்
சிவில்
சர்வீஸ்
தேர்வு
பற்றி
சீரியலில்
வரும்
காட்சி.
சின்னப்பசங்க
சொப்பு
வைத்து
விளையாடுவதுபோல்
திரைக்கதை
சீரியல்
என்றாலும்
ஒரு
நியாயம்
வேண்டாமா
என
கேட்கத்தோன்றுகிறது.

சீரியலை
கிண்டலடிக்கும்
சிவில்
தேர்வெழுதும்
மாணவர்கள்

தமிழ்
தொலைக்க
தொலைக்காட்சி
சீரியல்களை
பார்ப்பதற்கு
மிகுந்த
மன
தைரியம்
வேண்டும்
அல்லது
சுத்தமாக
மூளையை
கழட்டி
வைத்து
விட
வேண்டும்
என்கிற
நிலையில்
தான்
உள்ளது.
சீரியல்
இயக்குநர்கள்
கதாசிரியர்கள்
இந்த
உலகத்தில்
தான்
இருக்கிறார்களா
அல்லது
வேறு
ஏதேனும்
உலகத்தில்
சஞ்சரிக்கிறார்களா
என்பது
இதுவரை
தெரியவில்லை.
விஜய்
தொலைக்காட்சியில்
ராஜா
ராணி
என்கிற
சீரியலில்
ஐஏஎஸ்
ஐபிஎஸ்
பணிக்கான
சிவில்
தேர்வு
இண்டர்வியூ
காட்சிகளை
யூபிஎஸ்சி
மாணவர்கள்
சமூக
வலைதளங்களில்
போட்டு
கிண்டலடிக்கிறார்கள்.

இப்படித்தான் நடக்கும் இந்தியாவின் முதன்மைத்தேர்வு

இப்படித்தான்
நடக்கும்
இந்தியாவின்
முதன்மைத்தேர்வு

ஐஏஎஸ்
ஐபிஎஸ்
பணிக்கான
சிவில்
தேர்வு
மூன்று
கட்டமாக
நடக்கும்
இதில்
முதல்
நிலை,
முதன்மை
தேர்வு
என
இரண்டு
தேர்வை
வெல்ல
வேண்டும்.
முதல்
நிலை
தேர்வை
900
இடங்களுக்கு
ஆண்டுதோறும்
10
லட்சம்
பேர்
எழுதுகிறார்கள்.
அதில்
தேறியவர்கள்
பின்
முதன்மைத்தேர்வு
எழுதுவார்கள்.
இதில்
வடிகட்டிய
நிலையில்
3
லட்சம்
பேர்
வரை
இந்தியா
முழுவதும்
எழுதுவார்கள்.
இறுதியாக
இதிலும்
தேர்வானவர்கள்
டெல்லிக்கு
இண்டர்வியூவுக்கு
அழைக்கப்படுவார்கள்.
அங்கு
மத்திய
தேர்வாணைய
அதிகாரிகள்
(யூபிஎஸ்சி)
மூத்த
ஐஏஎஸ்
அதிகாரிகள்
நேர்முகத்தேர்வு
நடத்துவார்கள்.
முந்தின
தேர்வின்
மதிப்பெண்,
நேர்முகத்தேர்வின்
மதிப்பெண்
சேர்த்து
ரேங்க்
அடிப்படையில்
ஐ.எஃப்.எஸ்,
ஐஏஎஸ்,
ஐபிஎஸ்,
ஐஆர்எஸ்
என
வரிசையாக
போஸ்டிங்,
குறைந்த
ரேங்க்
உள்ளவர்களுக்கு
சொந்த
மாநிலத்தில்
போஸ்டிங்
கிடைக்காது.

தென் காசியில் வேலை செய்வதாக இருந்தால் ஐபிஎஸ் பொறுப்பை ஏற்கலாம்- மாமியார்

தென்
காசியில்
வேலை
செய்வதாக
இருந்தால்
ஐபிஎஸ்
பொறுப்பை
ஏற்கலாம்-
மாமியார்

இப்படிப்பட்ட
நடைமுறையை
ராஜா
ராணி
என்கிற
சீரியலில்
சின்னப்பசங்க
சொப்பு
வைத்து
விளையாடுவதுபோல்
டி.என்.பி.எஸ்.சி
தேர்வு
ரேஞ்சுக்கு
காட்டுகின்றனர்,
கதாநாயகையின்
லட்சியம்
ஐபிஎஸ்
அதிகாரி
ஆவது.
கணவர்
உதவி
புரிகிறார்.
ஆனால்
அவர்கள்
வீட்டில்
உள்ள
யாருக்குமே
ஐபிஎஸ்
அதிகாரி
குறித்தே
தெரியவில்லை.
மாமியார்
சொல்கிறார்
நீ
ஐபிஎஸ்
அதிகாரி
ஆனால்
தென்காசியில்
வேலை
செய்வது
போல்
இருந்தால்
போ
இல்லாவிட்டால்
வேண்டாம்
என்கிறார்.
இது
என்ன
விஏஓ
போஸ்டிங்கா?

முதல் நிலை தேர்வு மட்டும் எழுதி இண்டர்வியூக்கு போகும் நாயகி

முதல்
நிலை
தேர்வு
மட்டும்
எழுதி
இண்டர்வியூக்கு
போகும்
நாயகி

அடுத்து
வருவதுதான்
ஆகச்சிறந்த
காமெடி.
ஐபிஎஸ்
தேர்வு
(
அவர்கள்
பாணியிலேயே
சொல்வோம்)
எழுத
ஒரே
ஒரு
தேர்வை
மட்டும்
(முதல்
நிலை)
எழுதி
பாசாகி
விடுகிறார்.
அதன்
பின்னர்
நேராக
இண்டர்வியூ
செல்கிறார்.
இண்டர்வியூ
டெல்லியில்
உள்ள
யூபிஎஸ்சி
தலைமையகத்தில்
நடக்கும்.
ஆனால்
சென்னையில்
இண்டர்வியூவாம்.
அதுவும்
சாதாரண
கம்பெனி
இனடர்வியூவை
விட
மோசமாக
5
பேர்
ஒரு
அறை
முன்பு
அமர்ந்திருப்பார்.
கான்ஸ்டபிள்(அவர்
எங்கே
வந்தார்
இங்கே)
வந்து
அம்மா
நீங்க
உள்ளே
போங்கன்னு
சொல்வார்.

சிவில் தேர்வு இண்டர்வியூ நடத்துவது சீருடை அணிந்த போலீஸா?

சிவில்
தேர்வு
இண்டர்வியூ
நடத்துவது
சீருடை
அணிந்த
போலீஸா?

உள்ளே
போனால்
ஆகப்பெரிய
காமெடி
3
போலீஸ்
அதிகாரிகள்
சீருடையில்
அமர்ந்திருப்பார்கள்.
அதில்
ஒருவர்
ஏசி
ரேங்கில்
3
ஸ்டார்
வைத்திருப்பார்
(பயிற்சி
ஐபிஎஸ்
அதிகாரின்னு
வைத்துக்கொள்ளலாம்)
ஒரு
ஐஜி,
ஒரு
ஏடிஜிபி
ரேங்க்
அதிகாரி.
அட
அதிலாவது
மூன்று
பேரை
சாதாரண
உடையில்
அமர்த்தியிருந்தால்
கூட
சீனியர்
ஐஏஎஸ்
என
நினைக்க
வாய்ப்பு
இருக்கு
எந்த
காலத்தில்
சிவில்
தேர்வில்
சீருடையில்
அதுவும்
பயிற்சி
எஸ்பி
அமர்ந்து
இண்டர்வியூ
பண்ணுவார்.
மொத்த
காட்சிகளும்
காமெடி
தான்
அதில்
கேட்கும்
கேள்விகளுக்குள்
போனால்
இன்னும்
பல
விஷயங்கள்
எழுத
வேண்டி
இருக்கும்
நீளம்
கருதி
விட்டுவிடலாம்.

குறைந்தப்பட்சம் எக்ஸ்பர்ட்டுகளை அணுகலாம்

குறைந்தப்பட்சம்
எக்ஸ்பர்ட்டுகளை
அணுகலாம்

காட்சிகளை
எடுப்பதற்கு
முன்
சம்பந்தப்பட்ட
யாராவது
ஒருவரை
அல்லது
சிவில்
தேர்வுக்கு
தயாராகும்
ஒரு
மாணவரை
அழைத்து
கேட்டால்
கூட
சொல்லிவிடுவார்.
ஆனால்
சீரியல்
எடுக்கும்
இயக்குநர்,
கதாசிரியர்கள்
உலகம்
தனி
உலகம்
அல்லவா.
வீட்டிலுள்ள
குடும்ப
பெண்
அந்த
லிமிட்
இன்ஸ்பெக்டரை
கூப்பிட்டு
தன்
சொந்தங்களை
எப்படி
பழிவாங்கணும்
என்று
பாயிண்ட்
கொடுக்கும்
அளவுக்கு
காட்சி
வைக்க
கூடியவர்கள்
அல்லவா
கதாநாயகி
அதனால்
சிவில்
தேர்வு
காட்சிகளையும்
அதே
அளவுக்கு
வைத்துள்ளார்கள்.

சீரியல் அனைத்து தரப்பினரும் பார்ப்பதால் தவறு சட்டென்று தெரிகிறது

சீரியல்
அனைத்து
தரப்பினரும்
பார்ப்பதால்
தவறு
சட்டென்று
தெரிகிறது

சீரியல்
பார்ப்பவர்களுக்கு
இதுபோதும்
என்கிற
மன
நிலையில்
எடுக்கிறார்களா?
அல்லது
கதாசிரியர்,
இயக்குநர்களுக்கு
இவ்வளவுதான்
தெரியுமா?
என
தெரியவில்லை.
இரண்டாவது
ரகம்
தான்
இருக்க
வாய்ப்புள்ளது.
ஆனால்
சீரியலை
படித்தவர்கள்,
பதவியில்
உள்ளவர்கள்,
சிவில்
தேர்வுக்கு
தயாராகும்
மாணவர்கள்
என
பலரும்
பார்க்கின்றனர்.
இதனால்
தான்
இந்த
காட்சியே
சமூக
வலைதளத்தில்
கிண்டலடிக்கப்படுகிறது.
இதில்
இன்னொரு
விஷயம்
விஷயம்
தெரியாதவர்கள்
இதுபோன்ற
நிகழ்ச்சிகளை
பார்க்கும்போது
இதுதான்
உண்மை
என
நம்பவும்
வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.