செப்டம்பர் 19 என்றாலே பீதியில் உறையும் மெக்சிகோ மக்கள்… காரணம் இதுதான்!

உலகின் ஏதாவதொரு பகுதியில் அவ்வப்போது பூமி அதிர்வதும். அதன் விளைவாக நிலநடுக்கம் ஏற்படுவுதும் தற்போது வழக்கமான நிகழ்வு ஆகிவிட்டது. சீனா, தைவான், பப்புவா நியூ கினியா என வரிசையாக பல்வேறு நாடுகளில் அண்மையில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு -காஷ்மீரின் லடாக் பகுதியிலும் சில தினங்களுக்கு முன்பு நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதனால் விளைவாக பெரிய அளவில் உயிர்சேதம் இல்லை என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், கட்டடங்கள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் தங்களது உறைவிடங்களை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது.

தைவானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சியில் இருந்து உலகம் மீள்வதற்குள் வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லடாக்கில் நிலநடுக்கம்: அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள்!

மெக்சிகோவின் மத்திய பசிபிக் பகுதிகளான மைக்கோகன் மற்றும் கொலிமா மாாகாணங்களில் எல்லை பகுதியில், 9 மை்ல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் விளைவாக ஒருவர் பலியாகி இருப்பதாகவும், நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து பசிபிக் கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2017 செப்டம்பர் 19 இல் மெக்சிகோவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடு்க்கத்தில் சிக்கி 350 பேர் பலியாகினர். அதேபோன்று 1985 இதே செப்டம்பர் 19 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது செப்டம்பர் 19 ஆம் தேதி மீண்டும் அதேபோன்றதொரு பேரிடர் ஏற்பட்டுள்ளதால் செப்டம்பர் 19 வந்தாலே என்ன அசம்பாவிதம் நடக்க போகுதோ என்று மெக்சிகோ மக்கள் பீதியடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.