சேலை வாங்க ஆண்டுக்கு ரூ.4,000 செலவழிக்கும் 37 கோடி பெண்கள்: ஆய்வறிக்கையில் தகவல்

மும்பை: இந்திய பெண்களில் 37 கோடி பேர் ஆண்டுக்கு ரூ.4000 வரை சேலை வாங்குவதற்காக செலவழிக்கின்றனர் என்று ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனை குறித்த அறிக்கையை ‘டெக்னோபார்க்’ என்ற நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்ட பெண்களை மையமாக வைத்தே புடவை (சேலை) தயாரிப்பு தொழில் செயல்படுகிறது. வரும் 2031ம் ஆண்டில் இந்தியாவில் புடவை அணியும் பெண்களின் எண்ணிக்கை 45.5 கோடியாகவும், 2036ம் ஆண்டில் 49 கோடியாகவும் இருக்கும்.

25 வயதுக்கு மேற்பட்ட 37 கோடி  இந்தியப் பெண்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை புடவைகளை  வாங்கச் செலவிடுகிறார்கள். 2020 – 2025ம் நிதியாண்டுகளுக்கு இடையில் வட இந்தியாவில் புடவை வர்த்தகம் ஆண்டுதோறும் 6 சதவீதம் வரை வளர்ச்சியடையும். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் வடஇந்தியாவில் பெண்கள் அதிகமாக இருந்தும். அவர்களில் புடவை அணியும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும், அதனால் ரூ.15,000 கோடி அளவிற்கே வர்த்தகம் நடக்கிறது. ஆனால் நாடு முழுவதும் ரூ. 1 லட்சம் கோடிக்கு புடவை வர்த்தகம் நடக்கிறது.

திருமணங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் 41 சதவீத அளவிற்கு புடவைகளின் விற்பனை அதிகமாக இருக்கிறது. அதாவது, இந்த காலகட்டத்தில்  ரூ.23,200 கோடி மதிப்பிலான புடவைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தின் பனாரஸ் புடவை, ராஜஸ்தானின் கோட்டா, மத்திய பிரதேசத்தின் சாந்தேரி உள்ளிட்ட ரக புடவைகள் அதிகளவில் விற்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.