சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை அடுத்த மாதம் 2-வது வாரத்தில் கூட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 5 நாட்கள் கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.