தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு தீர்மானம் முதல்வரிடம் வழங்கல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினார்கள். தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இது நடந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அரசு வழங்கும் சிறுமுதலீட்டு படங்களுக்கான மானியத் தொகையையும், 2015ம் ஆண்டிலிருந்து 2021 ஆண்டு வரைக்கான திரைப்பட விருதுகளையும், பையனூரில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்கு மாடி வீடுகட்ட உதவியும், சங்க அலுவலகத்திற்கு சொந்த இடம் வழங்கக்கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சங்கத் தலைவர் என்.ராமசாமி வழங்கினார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு, சங்க செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் எஸ்.கதிரேசன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் உடன் இருந்தார்கள்.

“பொதுவாக முதல்வரிடம் கோரிக்கை மனு தான் கொடுப்பார்கள். ஒரு சங்கத்தின் பொதுக்குழு தீர்மானத்தை கொடுப்பது இதுதான் முதல்முறை. அதோடு பொதுக்குழுவை அண்ணா அறிவாலயத்தில் நடத்தியது, முதல்வரை சந்தித்து போன்றவற்றால் தற்போதைய நிர்வாகம் நாங்கள் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்பதை உணர்த்தி மற்றவர்களை பயமுறுத்த நினைக்கிறது.” என்கிறார் நடப்பு தயாரிப்பு சங்க நிர்வாகி ஒருவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.