திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த நர்ஸ்: இறந்து பிறந்த குழந்தை

திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருக்கு வயது 36 ஆகும். இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா வயது 33 ஆகும். இவர் இரண்டாவதாக கருத்தரித்து இருந்த நிலையில் மருத்துவரால் பிரசவ தேதி இன்று அறிவித்து இருந்த நிலையில் இன்று காலை சூனாம்பேடு இல்லிடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

வலி எடுத்தால் வந்து மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2:30 மணி அளவில் புஷ்பாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சூனாம்பேடு இல்லிடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு புஷ்பா சென்றுள்ளார், அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே மூன்று பேர் இருந்துள்ளனர்.

இதற்கிடையில் இதில் புஷ்பா தற்போது செய்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் பிரசவத்தில் பிரச்சனை உள்ளது என குறிப்பிட்டு இருந்துள்ளது. 

இதனை செவிலியர்கள் சரிவர கவனிக்கவில்லை எனத் தெரிய வருகிறது. இதனை அடுத்து இங்கேயே சுகப்பிரசவம் பார்த்து விடலாம் என செவிலியர்கள் தெரிவித்ததின் பேரில் மாலை 6 மணிக்கு குழந்தை தலைகீழாக கால்கள் மட்டுமே வந்துள்ளது. அதன்படி இறுதியாக என்ன செய்வது அறியாது தவித்த செவிலியர்கள் மருத்துவர் ஒருவருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில் திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவத்தை செய்யும்படி மருத்துவர் கூறியுள்ளார். மருத்துவர் சொன்ன ஆலோசனைப்படி செவிலியர்கள் செய்துள்ளனர், எவ்வளவு முயன்றும் குழந்தையின் தலை மட்டும் வெளியே வரவில்லை. 

இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் குழந்தை வரும் வழியிலேயே இறந்து பிறந்துள்ளது. இதனை அடுத்து மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அலட்சியப் போக்கால் குழந்தை இறந்து பிறந்ததாக குழந்தையின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர் வாங்க மறுத்து விட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.