சென்னை : நடிகர் அஜித்குமாரின் ஏகே61 படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் என அடுத்தடுத்து சூட்டிங் நடத்தப்பட்டது.
அடுத்ததாக பாங்காக்கில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் படக்குழுவினர் பாங்காக் செல்லவுள்ளனர்.
இதனிடையே இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நடிகர் அஜித்குமார்
நடிகர் அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹெச் வினோத். இந்தப் படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ள நிலையில், இந்த மூவர் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக ஏகே61 படத்தில் இணைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடத்தப்பட்டது.
ஐதராபாத் சூட்டிங்
ஐதராபாத்தில் சிறப்பான மற்றம் பிரம்மாண்ட செட் போடப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு, தொடர்ந்து விசாகப்பட்டினத்திலும் சூட்டிங் நடத்தப்பட்டது. அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக விரைவில் படக்குழு பாங்காக் செல்ல திட்டமிட்டுள்ளது. அங்கு தொடர்ந்து 3 வாரங்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
பாங்காக் சூட்டிங்
இதையடுத்து படத்தின் சூட்டிங்கையும் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். அல்லது தமிழ் புத்தாண்டு ரிலீசாக வெளியாகுமா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் கோரிக்கை
படம் பற்றிய அறிவிப்பு வெளியிட்டதுடன் எந்தவிதமான அப்டேட்டும் இல்லாமல் உள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர் ட்ரெண்டிங்கிலும் வைத்து வருகின்றனர். இதனிடையே இந்தப் படத்தின் சிறப்பான அப்டேட் இந்த வாரத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி நெருக்கடி?
நடிகர் அஜித் ஒரு படத்தை எடுத்தால் அதை முடித்துவிட்டே, அடுத்த பணிகளில் ஈடுபடுவார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்தப் படத்தின் இடையில் கிடைத்த கேப்களில் பிரிட்டன், லடாக் பயணங்களை அவர் மேற்கொண்டது விமர்சனங்களை எழுப்பியது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கும் நிதி நெருக்கடி காரணமாகவே தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.