சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பள்ளித் தலைவர் மற்றும் பல்வேறு குழுவின் தலைவர் நியமனம் செய்யும் புதிய நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்கப் பள்ளி, 92 நடுநிலை, 38 உயர்நிலை, 32 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 291 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க சென்னை மாநகராட்சி கல்வி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறன்றன. இந்நிலையில், சென்னை பள்ளிகளுக்கு என்று தனியாக இலட்சினை, பேட்ஜ் ஆகியவற்றை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், தலைமைப் பண்புகளை வளர்க்க பள்ளித் தலைவர், வகுப்புத் தலைவர், குழுத் தலைவர் உள்ளிட்ட புதிய முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளித் தலைவர் (prefect): ஒரு பள்ளியில் படிப்பு, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்கும் ஒரு மாணவர் அல்லது மாணவி பள்ளித் தலைவராக நியமிக்கப்படுவார். மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளில் முறை செயல்படுத்தப்படும். இதைப்போன்று துணை தலைவர் ஒருவரும் நியமிக்கப்படுவார்.
வகுப்புத் தலைவர் (school representative ) : ஒரு வகுப்பு சிறந்து விளங்கும் மாணவர் அல்லது மாணவி வகுப்புத் தலைவராக நியமிக்கப்படுவார்.
விளையாட்டுத் தலைவர் (Sports representative ): விளையாட்டில் சிறந்த விளங்கும் மாணவர் அல்லது மாணவி விளையாட்டுத் தலைவராக நியமிக்கப்படுவார்.
குழுக்கள்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று குழுக்களாக மாணவர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆதாவது ஒரு வகுப்பில் மொத்தம் உள்ள மாணவர்களின் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் இந்தக் குழுக்கள் பிரிக்கப்படுவார்கள். இந்தக் குழுவில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் இருப்பார்கள். இந்தக் குழுவிற்கு தலைவர் ஒருவரும் நியமிக்கப்படுவார்.