முதன்முறையாக, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்திய தூதரகத்திற்கு வருகை தந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த பல ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் முதல்முறையாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.
கூகுள் பே, போன்பே-க்கு செக்.. வாய்ப்பை தட்டி செல்லும் ஸ்விக்கி, சோமேட்டோ..!
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை
முதன்முறையாக, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, அமெரிக்கத் தலைநகரில் உள்ள இந்தியத் தூதரகத்திற்குச் சென்று, அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் இந்தியாவில் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல்பாடுகளின் பல்வேறு அம்சங்கள், குறிப்பாக டிஜிட்டல் மயமாக்கல் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
முதல் முறை
கடந்த வார இறுதியில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசி நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு விஜயம் செய்த பின்னர் சுந்தர் பிச்சை தனது ட்விட்டரில், ‘சிறந்த உரையாடலுக்கு இந்திய தூதர் சந்துவுக்கு நன்றி என்று தெரிவித்தார். கூகுள் சுந்தர் பிச்சை அமெரிக்க தூதரகத்திற்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலம்
அமெரிக்காவின் இந்திய தூதரை சந்தித்த சுந்தர்பிச்சை, ‘இந்தியாவுக்கான கூகுளின் அர்ப்பணிப்பு குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்று தெரிவித்தார். மேலும் இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கான எங்கள் ஆதரவை தொடர்ந்து தருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய தூதர் சந்து ட்விட்
இந்த சந்திப்பு குறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சந்து தனது ட்விட்டில், ‘இந்திய தூதரகத்தில் கூகுள் மற்றும் ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சையை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், சுந்தர் பிச்சையுடன் இந்தியா-அமெரிக்க வர்த்தக மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மையை விரிவுபடுத்துவது பற்றிய எண்ணங்களை பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
10 பில்லியன் டாலர் முதலீடு
சுந்தர் பிச்சையின் கீழ் உள்ள கூகுள் இந்தியாவில் பெரும் முதலீடு செய்துள்ளது என்றும், இளைய தலைமுறையினருக்கு கூகுள் அளித்து வரும் பயிற்சி உட்பட பல்வேறு சேவைகள் பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலுக்காக கூகுள் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம்
மேலும் இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் கூகுள் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது என்றும் கடந்த ஆண்டு கோவிட்-19 நெருக்கடியில் இருந்து மீண்டு வர கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் முக்கிய பங்கு வகித்தது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
In a first, Google CEO Sunder Pichai visits Indian Embassy
In a first, Google CEO Sunder Pichai visits Indian Embassy | முதல்முறையாக இந்திய தூதரகம் சென்ற கூகுள் சுந்தர் பிச்சை.. என்ன காரணம் தெரியுமா?