இந்தியா – ரஷ்யா மத்தியிலான வர்த்தகத்தை மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக இரு நாடுகளும் உள்நாட்டு நாணயத்தில் செய்ய முடிவு செய்தது.
இதற்காகக் கட்டமைப்பை ஆர்பிஐ உருவாக்கி இரு நாடுகளும் பிற நாடுகளில் வங்கி கணக்கை உருவாக்கி பணிகளைத் துவங்கியுள்ளது. ஆர்பிஐ உருவாக்கிய கட்டமைப்பில் ரஷ்யா மட்டும் அல்லாமல் எந்த நாடு வேண்டுமானாலும், எந்த நிறுவனம் வேண்டுமானாலும் உள்நாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்ய முடியும் என்பதால் டாலர் ஆதிக்கம் பெரிய அளவில் குறையும்.
இந்த நிலையில் இந்தியாவில் 2வது பெரிய கச்சா எண்ணெய் சப்ளையர் நாடான சவுதி அரேபியாவும் ஆதரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது.
ஸ்வீடன் செய்ததை அமெரிக்கா செய்தால்.. இந்தியா அவ்வளவு தான்..!

சவுதி அரேபியா
இந்தியாவும் சவுதி அரேபியாவும் ரூபாய்-ரியால் நாணய அடிப்படையிலான வர்த்தகத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் மற்றும் யுபிஐ மற்றும் ரூபே கார்டுகளைச் சவுதி-யில் அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அந்நாட்டுத் தலைவர்கள் உடன் ஆலோசனை செய்துள்ளார்.

பியூஷ் கோயல்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சவுதி அரேபியா ரியாத்-க்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ரஷ்யா-வை போல் உள்நாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்வது குறித்து ஆலோசனை செய்துள்ளார். விசா, மாஸ்டர்கார்டு போல ரூபே கார்டு வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்படும் போது இவ்விரு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைக்க முடியும்.

அப்துல் அஜிஸ் பின் சல்மான்
பியூஷ் கோயல் மற்றும் சவூதியின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் அல்-சௌத் ஆகியோர் கவுன்சிலின் பொருளாதாரம் மற்றும் முதலீடுகளுக்கான குழுவின் அமைச்சர்கள் கூட்டத்தில் பேசினர். இந்தச் சந்திப்பில் பல முக்கியமான திட்டம் குறித்துப் பேசப்பட்டது.

41 வணிகத் துறை
சவுதி அரேபியாவின் முக்கியத் தொழிலதிபர்களுடன் ஒரு CEO வட்ட மேசையில் கோயல் பங்கேற்றார் இக்கூட்டத்தில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை, உள்கட்டமைப்பு ஆகிய 41 வர்த்தகத் துறையில் ஒத்துழைப்பு அளிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டது.

முக்கியத் திட்டங்கள்
மேற்கு கடற்கரை சுத்திகரிப்பு, எல்என்ஜி உள்கட்டமைப்பு முதலீடு மற்றும் இந்தியாவில் மூலோபாயப் பெட்ரோலிய சேமிப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட கூட்டுத் திட்டங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் அளித்துச் சவுதியின் ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.
India, Saudi Arabia discuss Rupee-Riyal trade like Russia
India, Saudi Arabia discuss Rupee-Riyal trade like Russia