பல முன்னணி தொழிலதிபர்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக கோடிக்கணக்கில் நன்கொடை அளித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கனடா நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான சிப் வில்சன் என்பவர் 76 மில்லியன் டாலர் அதாவது ரூ.600 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
அவர் கனடாவில் உள்ள வன நிலத்தை பாதுகாப்பதற்காக இந்த தொகையை நன்கொடையாக அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 ஃபண்ட்ஸ்.. அட்டகாசமான 3 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. நீங்க முதலீடு?
76 மில்லியன் டாலர் நன்கொடை
கனடாவின் 13வது பணக்காரரும், தொழிலதிபரும் லுலுலேமன் அத்லெட்டிகாவின் நிறுவனருமான சிப் வில்சன், கனடாவின் உள்ள வன நிலத்தை பாதுகாக்க 76 மில்லியன் டாலர்களை வழங்க முடிவு செய்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.600 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
வன நில பாதுகாப்பு
சிப் வில்சனின் சொத்து மதிப்பு சுமார் 5.7 பில்லியன் டாலர் என்ற நிலையில் அவர் இந்த நன்கொடையை அளித்துள்ளார் என்பதும், கனேடிய வன நில பாதுகாப்பு வரலாற்றில் தனிப்பட்ட நபர் அளித்த மிகப்பெரிய நன்கொடை இதுதான் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த தலைமுறை
இதுகுறித்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் சிப் வில்சன் கூறியபொது, ‘வன நிலங்களை பாதுகாப்பது என்பது அனைவரது கடமை என்றும், அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் உதவி என்றும், நில பாதுகாப்புக்கு உதவி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.
பூங்காக்கள்
இந்த நன்கொடை காரணமாக வன நிலங்கள் பூங்காக்களாக மாறும் என்று கூறிய அவர், பூங்காக்களை பராமரிக்க தங்கள் அறக்கட்டளையின் நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க பில்லியனர்
அமெரிக்க பில்லியனர் Yvon Chouinard என்ற கோடீஸ்வரர் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு $3 பில்லியன் வழங்கிய சில நாட்களில் சிப் வில்சன் இந்த நன்கொடை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Yvon Chouinard நன்கொடை அளித்தவுடன் ‘பூமி இப்போது எங்களின் ஒரே பங்குதாரராக உள்ளது” என்று கூறியது தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் சிப் வில்சன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அழிந்து வரும் காடுகள்
கனடாவில் உள்ள மேற்கு கடற்கரை ஒட்டிய பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள வனப்பகுதிகள் அழிந்து வருகின்றன என்றும், அதனை காப்பதற்காகவே இந்த நன்கொடையை தான் அளித்துள்ளதாகவும் அவர் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள வன நிலத்தை பேணிக்காக்க வேண்டியது தன்னுடைய கடமையாக நினைப்பதாகவும் அந்த பகுதியை சுற்றுலா தளமாக மாற்றினால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
13வது பணக்காரர்
தொழிலதிபர் சிப் விலன்சன் விளையாட்டு துறை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் லூலுலெமோன் அத்லெடிகா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் அவரது உற்பத்தி பொருள்கள் வணிகம் செய்யப்படுகிறது. மேலும் அவர் உலக பணக்காரர் பட்டியலில் 13வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Lululemon’s billionaire founder donated $76 million preserve forest land in Canada
Lululemon’s billionaire founder donated $76 million preserve forest land in Canada | ரூ.600 கோடி நன்கொடை அளித்த பிரபல தொழிலதிபர்.. எதற்காக தெரியுமா?