கவிஞர் கபிலனின் மகள் தூரிகை திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். அவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மகள் தூரிகையின் திடீர் மரணத்தை தந்தை கபிலனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மகளை நினைத்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
வாசலில் உன் காலணி இருக்கிறது. நீ மட்டும் எங்கே போனாய் மகளே என்று கேட்டு உருகியிருக்கிறார்.
கவிஞர் கபிலனின் மகள் தந்தையைப்போல கலைத்துறையில்
திரைக்கவிஞர் கபிலன் தமிழ் திரையுலகில் முற்போக்கு கருத்துக்களுடன் பாடல் எழுத வந்தவர். தொடர்ச்சியாக திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவது முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து செயல்படுவது என கபிலன் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தார். தந்தை வழியில் முற்போக்கான பாதையில் நடந்த மகள் தூரிகையும் முற்போக்கு சிந்தனை பெண்ணியவாதியாக வளர்ந்து வந்தார். முற்போக்கு இயக்க தலைவர்கள், திராவிட இயக்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். முன்னணி இதழ் ஒன்றில் தொடர்ந்து கட்டுரை எழுதி வந்த தூரிகை தந்தையைப்போலவே சினிமா பக்கமும் தொடர்பில் இருந்தார்.
முற்போக்கான தைரியமான பெண் தூரிகை
தூரிகை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்.17 அன்று பீயிங் வுமன் என்கிற பெண்களுக்கான டிஜிட்டல் இதழை தொடங்கி நடத்தி வந்தார். இதில் பெண்களுக்கான ஆக்கபூர்வ பிரச்சினைகள் குறித்து பேட்டிகள் எடுத்து பதிவிட்டு வந்தார். விக்ரம் படத்தில் நடித்த டீனா பெரும் பாராட்டைப் பெற்றது சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தனது முகநூலில் தூரிகை புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்தியிருந்தார். வாழ்க்கையில் முற்போக்கான பல விஷயங்களை பேசியும் எழுதியும் வந்த ஒரு பெண். பெண்களின் உரிமைகளுக்காக சிந்தித்த பெண். நல்ல விஷயங்கள் நடக்க நேரம் எடுக்கும், அந்த காத்திருப்பை ரசியுங்கள் என பதிவிட்டவர், எதைக்கண்டு இனி முடியாது என வாழ்க்கையை முடித்துக்கொண்டார் எனப்பலரும் கேள்வி எழுப்பினர்.
மகளை மறக்க முடியாமல் உருகும் தந்தை கபிலன்
தந்தை கபிலன் மகளை மிகவும் தைரியமான பெண்ணாக வளர்த்தார். ஒரு துணிச்சலான பெண் இப்படி அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்தது இன்றுவரை அவரால் நம்ப முடியாமல் தவிக்கிறார். மகளை நினைத்து உருகி கவிதை ஒன்றை குமுதம் வார இதழில் கபிலன் எழுதியுள்ளார். அதை படிக்கும்போது அவரது துக்கம் மனித நேயம் உள்ள யாரையும் தொற்றிக்கொள்ளும். அவரது கவிதை இதோ..
எங்கே போனாள் தெரியவில்லை..வாசலில் மட்டும் அவளின் காலணி
எல்லா தூக்க மாத்திரைகளையும் அவளே போட்டுக் கொண்டால்.. நான் எப்படி தூங்குவேன்..
எங்கே போனாள் என்று தெரியவில்லை..அவள் காலனி மட்டும் என் வாசலில்..
மின்விசிறி காற்று வாங்குவதற்கா? உயிரை வாங்குவதற்கா..?
அவள் கொடுத்த தேநீர் கோப்பையில் செத்து மிதக்கிறேன் எறும்பாய்..
அவளுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா இல்லையா, எனக்கு தெரியாது அவளை என் கடவுள்..
குழந்தையாக அவளை பள்ளிக்கு தூக்கிச் சென்ற பாரம் இன்னும் வலிக்கிறது..
கண்ணீர் துளிகளுக்கு தெரியுமா கண்களின் வலி..
யாரிடம் பேசுவது எல்லா குரலிலும் அவளே பதிலளிக்கிறாள்..
கண்ணீரின் வெளிச்சம் வீடு முழுக்க நிரம்பியிருக்க இருந்தாலும் இருக்கிறது இருட்டு..
பகுத்தறிவாளன் ஒரு கடவுளை புதைத்து விட்டான்
மகள்..என்கிற தலைப்பில் கவிஞர் கபிலன் இவ்வாறு எழுதியுள்ளார்.

சோகத்தில் பெரிது புத்திர சோகம்
சோகத்தில் மிகப்பெரியது புத்திர சோகம் என்பார்கள். ஆசை ஆசையாய் வளர்த்த மகள், ஒவ்வொரு சம்பவத்திலும் நினைவுகளாக கொல்லும் போது மகளை இழந்த தந்தையின் மனதின் வலியாய் வெளிப்பட்டுள்ளது கவிதை. அவர் கண்ணில் படும் அனைத்தும் மகளின் நினைவாக கொல்கிறது என்பதை மென்மையாக சொல்லியிருக்கிறார். ஆனால் அதன் வலி ஆழமானது. மகள் ஒருமுறை கவலைப்பட்டு போய்விட்டார். தந்தை காலம் முழுவதும் வருந்துகிறார். இந்த கவிதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.