விண்வெளிக்கு சுற்றுலா விமானங்களை அனுப்பு திட்டத்தை 2025-ஆம் ஆண்டிற்குள் துவங்க சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விண்வெளி சுற்றுலா விமானங்களான ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் விமானத்தை போலவே இருக்கலாம் என்றும், இது பூமியின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ. உயரத்திற்கு சென்று கார்மென் கோட்டைத் தொட்டு திரும்பும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பயணத்திற்கு ஒரு நபருக்கு 2 முதல் 3 மில்லியன் யுவான் வரை வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.